தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி வீட்டுக்குத் தெரியாமல் ராதிகாவுடன் நெருக்கம் காட்டி பழகி வருகிறார். அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வருகிறார்.
கோபி பற்றி உண்மை தெரிந்தும் எழில் மற்றும் கோபியின் அப்பா என இருவரும் அமைதியாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த விஜய் டிவி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த அப்பாவுக்கான விருதை பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் ரோசரி வாங்கினார்.
அப்போது கோபி சிக்க மாட்டாரா என்ன தான் நடக்கும் என கேட்டதற்கு விரைவில் கோபிக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம் நடக்கும். அதன்பிறகு குடும்பத்தார் எல்லோரும் அவரை சேர்ந்த அடிப்பார்கள் எனக் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியதில் இருந்து பார்க்கும்போது சீரியலில் நிச்சயம் கோபி ராதிகாவுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
