தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சதிஷ். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சீரியலுக்கே இவர் தான் பலம் என சொல்லலாம்.
பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டு இவர் படும் பாடு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார் எனவும் இனி அவருக்கு பதிலாக பிக் பாஸ் சஞ்சீவ் நடிக்கிறார் எனவும் புகைப்படங்களுடன் தகவல்கள் பரவி வந்தன.
ஆனால் உண்மையில் இது விளம்பர படத்துக்கான ஷூட்டிங் என்பது தெரிய வந்துள்ளது. ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் அதில் இணைந்து நடித்து உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
View this post on Instagram