ராஜியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட கதிர். கண் கலங்கிய கோமதி. இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. மெகா சங்கமமாக இணைந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்களின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கோமதி கதிரிடம் நீ ராஜியை கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்ல அதைக் கேட்டு கதிர், மீனா என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கதிர் என்னை நீ செத்துப் போக சொன்னா கூட செத்துப் போயிடுவேன் ஆனா அவளை கல்யாணம் பண்ண சொல்லாத என்று அதிர்ச்சி கொடுக்க கோமதி எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலடா என் அண்ணன் குடும்பத்துக்கு நான் தேடித்தந்த அவமானத்துக்கு பிராயசித்தமா தான் இது செய்யப் போறேன் என்று கூறுகிறார்.

கதிர் என்னால இது செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவிக்க காலில் விழுந்து கெஞ்சுகிறார் கோமதி. ராஜி மானத்தையும் என் அண்ணன் குடும்பத்தோட கௌரவத்தையும் காப்பாத்த இது தவிர எனக்கு வேற வழி தெரியல என்று கெஞ்சி நீ சம்மதம் தெரிவிக்காமல் நான் எழுந்துக்க மாட்டேன் என்று சொல்ல வேறு வழி இன்றி கதிர் எனக்கு எல்லாத்தையும் விட நீ தான் முக்கியம் உனக்காக நான் இதை பண்றேன் என ஒப்புக்கொள்கிறார்.

பிறகு ராஜீயிடம் வந்து உனக்கும் கதிருக்கும் கல்யாணம் என்று சொல்ல அதிர்ச்சி அடையும் ராஜி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்ல சரி வேற என்ன பண்ண போற கதிர் மட்டும் உன்ன பிடிச்சி கல்யாணம் பண்றான்னு நினைக்கிறியா? இல்லவே இல்ல இதை விட்டா வேற வழி என்ன இருக்கு உன் மானத்தையும் என் அண்ணன் குடும்ப கவுரவத்தையும் காப்பாத்த இது ஒன்றுதான் வழி. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா சொந்தக்காரங்க சண்டை போட்டு பேசாம இருந்தாங்க லவ் பண்ணி இருக்காங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு சாதாரணமா போயிடும்.

ஆனா நீ ஒருத்தன் நம்பி ஏமாந்து நகை பணம் எல்லாம் கோட்டை விட்டு நிக்கிறேனு தெரிஞ்சா எல்லாரும் கேவலமா பேசுவாங்க அப்புறம் என் அண்ணன் குடும்பம் மொத்தமா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிடுவாங்க, இதெல்லாம் நடக்க கூடாதுன்னா இந்த கல்யாணம் நடக்கணும் என்று சொல்லி இந்த கல்யாணம் நடக்கணும் என்று கோமதி கிளம்பி செல்கிறார்.

அடுத்ததாக எழில் பாக்யாவிடம் என்னம்மா திடீர்னு இப்படி சொல்றாங்க கதிருக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா நான் அவன்கிட்ட பேசவா என்று கேட்க பாக்யா நாம பேசி என்ன ஆகப்போகுது நீ எதுவும் பேச வேண்டாம் என்று கூறுகிறார்.

பிறகு கோமதி பாக்கியாவை சந்தித்து எனக்கு ஒரு உதவி பண்ணனும் நான் இதை யார் கிட்ட கேட்கிறது? எப்படி கேட்கிறது என்று தெரியவில்லை. கோவில்ல கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் மட்டும் பண்ணுங்க என்று கேட்க எழில் அத நாங்க பார்த்துக்கிறோம் என்று வாக்கு கொடுக்கிறார்.

இது பெரிய விஷயம் இல்ல இதைவிட நான் ஒரு பெரிய விஷயம் பண்ண போறேன் அதுல என் பையனையே நான் பலி கெடாவாக்க போறேன் என்று கூறுகிறார். அதாவது கதிரையும் ராஜியையும் நாங்க ஊருக்கு கூட்டிட்டு போக போறது கிடையாது இந்த கல்யாணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நானும் மீனாவும் முதல்ல ஊருக்கு போயிட போறோம். அவங்களா காதலிச்சு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி வீட்டுக்கு வரட்டும். நான் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சேன்னு தெரிஞ்சா அவருக்கு ஏதாச்சும் ஆயிடும்னு எனக்கு பயமா இருக்கு என்று கூறுகிறார்.

மேலும் கல்யாணம் முடிந்ததும் நீங்கதான் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடனும் எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க காலம் முழுக்க நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருப்பேன் என்று சொல்ல முதலில் பாக்கியா யோசிக்க எழில் நாம பண்ணலாம் என்று சொல்ல பிறகு பாக்யாவும் சரி என்று சம்மதம் கூறுகிறார். பிறகு கோவிலில் கல்யாணம் ஏற்பாடுகள் செய்துவிட்டு இவர்கள் ரூமுக்கு கிளம்பி வருகின்றனர்.

மறுபக்கம் மீனா கதிரை சந்தித்து உனக்கு இதுல நிச்சயமாக விருப்பமில்லை என்று எனக்கு தெரியும். உனக்கு பிடிக்காதவங்களுக்காக உன் வாழ்க்கையை எதுக்கு பணயம் வைக்கப் போற முடியாதுன்னு தீர்த்து சொல்லிடு என்று கூற பிடிக்காதவங்களுக்காக பண்ணல அண்ணி புடிச்சவங்களுக்காக தான் பண்றேன். எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிச்சது என் அம்மா தான் என் அப்பாவை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும், கண்ட இடத்துல கண்டபடி போட்டு அடிப்பாரு ஓடிவந்து தடுத்து எனக்கு விழுகிற நூறு அடியில 50 அடி என் அம்மா தான் வாங்குவாங்க என உருக்கமாக பேச வெளியில் இருந்து கோமதி இதைக் கேட்டு கண் கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-episode-update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago