Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மயங்கிய கோபி. பதற்றத்தில் ஈஸ்வரி.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ராதிகா, கோபி, மயூ என மூவரும் நகை கடைக்கு வர கோபி சிம்பிளாக எடுக்கலாம் என்று சொல்ல ராதிகா கிராண்டாக எடுக்க வேண்டும் என சொல்லி நகையை தேர்வு செய்ய விலையை கேட்ட கோபி அப்படியே நெஞ்சை பிடித்து சரிகிறார்.

பிறகு ஹாஸ்பிடல் அட்மிட் செய்ய கோபிக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கிறார். ராதிகா பதறி போய் இருக்க இங்கே ஈஸ்வரி கோபிக்கு ஏதோ ஆனது போல கனவு கண்டதாக சொல்லி பயந்து கோபிக்கு போன் செய்கிறார். கோபி கடைக்கு போன இடத்தில் மயங்கி விழுந்துட்டேன் என சொல்ல ஈஸ்வரி நெஞ்சு வலியா என பதறுகிறார்.

எல்லோரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல ஈஸ்வரி நான் கோபியை பார்த்தே ஆகணும் என அழுது புலம்புகிறார். செழியன் கோபிக்கு போன் செய்ய ராதிகா ஃபோனை எடுத்து அவருக்கு ஒன்னும் இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வரும் என்று சொல்ல ஈஸ்வரி நான் இப்பவே அவனை பாக்கணும் என்று சொல்கிறார்.

இனியாவும் நானும் இப்பவே அப்பாவை பாக்கணும் என சொல்லி அடம்பிடிக்க பிறகு செழியன் இருவரையும் கூட்டிக்கொண்டு ராதிதா வீட்டிற்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-episode-update
baakiyalakshmi-episode-update