Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கார் ஓட்ட முடிவெடுத்த பாக்கியா. பதறிய ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி டிரைவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒழுங்கா உஷாரா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும் என வார்னிங் கொடுத்து எல்லோரையும் அனுப்பி வைக்க செல்வி வழக்கம் போல கலாட்டா செய்து கொண்டு வர டிரிப் ஜாலியாக தொடங்குகிறது.

தாம்பரத்தை கடந்து வந்த பிறகு திடீரென டிரைவருக்கு ஒரு போன் கால் வர போனை அட்டென்ட் செய்த போது அவருடைய அப்பாவுக்கு ஆக்சிடென்ட் என தெரியவந்து அவர் கூட யாருமே இல்லை என்ற பதற்றத்தோடு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி வருகிறார். இதனால் ஈஸ்வரி டிரைவர் இல்லாமல் எப்படி போறது ஒரு வாரம் வெயிட் பண்ணி நீ கோபியோடவே போய் இருக்கலாம். அவதான் அடம் பிடிக்கிறானா நீயும் அவ கூட சேர்ந்து ஆடுற என பாக்யாவை பிடித்து திட்ட கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அத்தை என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று எழில், செழியன் என இருவருக்கும் போன் செய்ய இருவரும் போனை எடுக்காமல் இருக்கின்றனர்.

மறுபக்கம் கோபி மயூவுக்கு தங்க நகை கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். அடுத்ததாக கொஞ்ச நேரம் யோசித்து பாக்யா டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய ஈஸ்வரி நீயா ஓட்ட போற என பதறுகிறார். வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் பாக்யா காரை எடுக்க ஈஸ்வரி கண்ணை மூடிக்கொண்டு பயத்தில் ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இங்கே விருந்தினர்கள் எல்லோரும் வர மயூவை தயார் செய்து விழா மேடைக்கு அழைத்து வருகின்றனர். புடவையில் மயூவை பார்த்த கோபி வியந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
Baakiyalakshmi Episode Update