Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கேண்டினில் அமிர்தா செல்வி ஆகியோர் இருக்கும்போது வேகவேகமாக அங்கு வரும் ராதிகா பாக்யா எங்கே என்று கேட்க அமிர்தா அம்மா இன்னிக்கு வரல என்று கூறுகிறார்.
மேடம் இந்த பக்கமே வரவில்லை போல எப்ப வருவாங்க என்று கேட்க வருவாங்க என்று அமிர்தா சொல்ல என்னைக்கு நாளைக்கா? அடுத்த வாரமா? இல்ல அடுத்த மாசமா என நக்கலாக கேள்வி கேட்கிறார். பிறகு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொல்லி லிஸ்ட் ஒன்றை கொடுத்து நாளைக்கு மறுநாள் ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு ஒரு 70, 80 பேர் வருவாங்க அவங்களுக்கு லஞ்ச்
ரெடி பண்ணனும் என்று லிஸ்ட்டை கொடுத்துவிட்டு செல்கிறார்.
அமிர்தா அம்மாவை கூப்பிட்டு பாக்கலாம் வந்தா நல்லா இருக்கும், வரவில்லை என்றால் நாம் அனைவரும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். இங்க வீட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அவர் டயர்ட் ஆக வருவதை பார்த்து ராமமூர்த்தி உடம்பு வருத்திக் கொண்டு எதுக்குமா இவ்வளவு கஷ்டப்படுற என்று கேள்வி கேட்க கஷ்டமா தான் இருக்கு மாமா ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் செய்யும்போது சந்தோஷமா இருக்கு என்று கூறுகிறார்.
ரொம்ப வருசமா ஒரே இடத்துல நின்னுட்டேன் இப்பதான் நடக்க தொடங்கி இருக்கேன் நான் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு என்று சொல்லி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்துகிறார்.
அதனை தொடர்ந்து பாக்யா சமையல் செய்து கொண்டிருக்கும் போது கேண்டினில் இருந்து வரும் செல்வி மற்றும் அமிர்தா ராதிகா கொடுத்த லிஸ்ட் எடுத்து கொடுத்து விஷயத்தை சொல்ல சரி பார்த்துக்கலாம் என்று சொல்கிறார். மேலும் அன்னைக்கு நான் லீவு போட்டுட்டு கேன்டீன் வந்துடுறேன் ராதிகா கொடுத்த ஆர்டர் என்பதால் கொஞ்சம் கவனமாக தான் இருக்கணும் என்று முடிவு எடுக்கிறார்.
மறுநாள் காலையில் மூணு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து சமைக்க ஈஸ்வரி இவ்வளவு சீக்கிரம் எதுக்கு எழுந்துகிற தூங்க வேண்டியது தானே என்று கேட்க பாக்யா சீக்கிரம் வேலையை முடித்துவிட்டால் நல்லது தானே என்று கூறுகிறார். பிறகு அமிர்தா வர நான் உதவி பண்ணுகிறேன் என்று சொல்ல அவரையும் நீ போய் தூங்கு என்று அனுப்பி வைத்துவிட்டு தனியாக பாக்யா எல்லா வேலைகளையும் செய்கிறார்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பாக்கியா, பழனிச்சாமி லோபிதா ஆகியோர் பேசிக்கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து கோபி அங்கு வந்து இவர்கள் சிரித்து பேசுவதை பார்த்து கடுப்பாகிறார். பிறகு இருவருக்கும் எதிரே வந்து நிற்க பாக்யா கோபியை பார்த்து அதிர்ச்சி அடைய நீ இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கியா? வீட்ல அப்படியே நல்லவ வேஷம் போட்டுக்கிட்டு இங்க வந்து என்னென்ன வேலை எல்லாம் பாக்குற என பாக்யாவை அவமானப்படுத்தி பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…