baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவுடன் காலேஜுக்கு வந்து இறங்க மிகப்பெரிய காலேஜை பார்த்து எவ்வளவு பெருசா என வியக்கிறார். பிறகு இனியாவை வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர சொல்லி வெளியில் இருக்கும் விநாயகரை வணங்க சொல்லி காலேஜுக்குள் அழைத்து செல்கிறார்.
உள்ளே போன பாக்கியா வெள்ளந்தியாக இதுதான் உங்க டீச்சரா என ப்ரொபசர் ஒருவரை பார்த்து கேட்க இனியா இங்கே டீச்சர்லாம் கிடையாது சார் மேடம் புரபசர் என்று தான் சொல்லணும் என கூறுகிறார். பிறகு ஆபீஸ் ரூமுக்கு சென்று அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கி அதை பாக்கியாவே பில் செய்து மொத்த பணத்தையும் கட்டுகிறார். பிறகு பிரின்ஸ்பல் பார்ப்பதற்காக வெளியில் காத்திருக்கும் போது கோபி தன்னுடைய நண்பரை சந்தித்து விஷயத்தை சொல்லி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ப்ளீஸ் கட்ட காலேஜுக்கு வருகிறார்.
இனியாவை பார்த்ததும் பேங்குக்கு போய் டிடி எடுக்க லேட் ஆயிடுச்சு சரி வா போய் பீஸ் கட்டிடலாம் என்று கூப்பிட அம்மா கட்டியாச்சு என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். மொத்த பணத்தையும் கட்டியாச்சா என்று கேட்க ஆமாம் என்று இனியா சொல்ல இன்னும் கோபிக்கு ஷாக் அதிகமாகிறது. அவ எப்படி கட்டணம் என்று கோபி வாக்குவாதம் செய்ய இதை வைத்து ஒரு வாக்குவாதம் வேண்டாம், இனியா எனக்கும் பொண்ணு தான் என பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து கோபி சரி பிரின்ஸ்பால் பார்க்க போகலாம் என்று இனியாவை கூப்பிட்டுக்கொண்டு பாக்கியாவை நீ வெளியவே இரு, உள்ள வந்து அவங்க பேசுறது ஒன்னும் புரியாம நீ அவமான படுறது இல்லாம நம்ம குழந்தையும் அவமானப்பட வைத்து விடுவ என்று சொல்லி இனியாவை கூட்டிக்கொண்டு உள்ளே செல்ல பாக்கியா ஜெனி மற்றும் எழிலிடம் காலேஜில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் பேச வேண்டும் என எல்லாத்தையும் கேட்டு தெரிந்து கொண்டது ஃபிளாஷ் கட்டில் தெரிய வருகிறது.
கோபி கதவை திறக்கும் சமயம் பாக்கியாவும் வந்து கதவை திறந்து எக்ஸ்கியூஸ் மேடம், மே ஐ கம் இன் என்று கேட்டு உள்ளே செல்ல கோபி மிரண்டு நிற்கிறார். அதோட இல்லாமல் பிரின்சிபலிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசி கோபியை சரிய வைக்கிறார். கோபி இனியாவிடம் பேசுறது உங்க அம்மா தான இல்ல வெளியில் இருந்து யார்னா டப்பிங் கொடுக்கறாங்களா என்ன கேட்க அம்மா தான் டாடி கோபி தன்னைத்தானே கில்லி பார்த்து உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பிறகு பாக்கியா கெத்தாக இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே வர அதைப் பார்த்து கோபி மிரண்டு போகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…