வருத்தத்தில் இனியா.கோபி எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா தன்னுடன் வேலை செய்பவர்களை அழைத்து பெரிய ஆடர் பற்றி பேச அவர்கள் அதெல்லாம் ரொம்ப கஷ்டம் வேணாம்னு சொல்லிடுங்க என்று சொன்னதை கேட்டு பாக்யா அதிர்ச்சி அடைகிறார். நம்மளால ஏன் முடியாதுன்னு நினைக்கிறீங்க கண்டிப்பா முடியும் என ஊக்கப்படுத்தி பேச பிறகு ஒவ்வொருத்தராக இந்த ஆர்டரை எடுத்து செய்ய ஒத்துக் கொள்கின்றனர்.

அதன் பிறகு பாக்யா இந்த மாசம் சம்பளத்தை நான் உங்களுக்கு வழக்கம் போல கொடுத்திடுவேன் ஆனா இந்த ஆர்டர் பணத்தை நான் உடனே கொடுக்க முடியாது என சொல்கிறார். பாண்டிச்சேரி வேற வந்து சமைக்கனும்னு சொல்ற ஆனா சம்பளமும் இல்லை என்றால் எப்படி என்று கேட்க நான் சம்பளம் இல்லை என்று எப்ப சொன்னேன்? உடனடியா கொடுக்க முடியாது கொஞ்சம் டைம் எடுத்துப்பேன். ஒரு ரெண்டு மாசத்துல ரெண்டு மூணு டீயூவ்வா கொடுத்து விடுவேன் என்று சொல்ல பிறகு எல்லோரும் யோசித்து எங்களுக்காக நீ எவ்வளவோ பண்ணி இருக்க உங்களுக்காக இதை பண்ண மாட்டோமா சரிக்கா என்று சொல்லி கிளம்புகின்றனர்.

இன்னொரு பக்கம் இனியா எக்ஸாம் முடித்துவிட்டு கோபியுடன் வீட்டிற்கு கிளம்பி வரும்போது கோபி எக்ஸாம் பற்றி கேட்க இனியா டல்லாகவே பதில் சொல்ல என்ன ஆச்சு என்று கேட்கிறார். வீட்ல உங்களால நடக்கிற பிரச்சனையால் வருத்தமா இருக்கு என்று சொல்ல கோபி எல்லா பிரச்சினைகளுக்கும் நான் தான் காரணம் என்பது எனக்கு நல்லாவே தெரியுது என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

இனிமே வீட்ல சண்டை நடக்காது அதுக்கு நான் கேரண்டி என இனியாவுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். மறுபக்கம் எழில் பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் செழியன் நானும் என்னால் முடிந்த அளவிற்கு பணத்தை ரெடி பண்ணித்தரேன் என சொல்லிக் கொண்டிருக்க மாலினி விடாமல் போன் செய்கிறார். செழியன் போனை எடுக்காததால் மேனேஜருக்கு போன் செய்து கம்ப்ளைன்ட் செய்ய மேனேஜர் செழியனுக்கு போன் செய்து கோபப்படுகிறார்.

பிறகு பாக்யா ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியிடம் இந்த 5000 பேருக்கு சமைக்கும் பெரிய ஆர்டர் குறித்து பேச நீ எங்களுக்காக தான் இவ்வளவு கஷ்டப்படுற என வருத்தப்படுகின்றனர். ஈஸ்வரி பெத்த புள்ளையே வீட்ல இருக்குறதுக்கு பணம் கேட்கிறான். ஆனால் எங்களுடைய மருமக சொந்த மகள் மாதிரி எங்களுக்காக கஷ்டப்படுற இதெல்லாம் வேண்டாம் வேற ஏதாவது வழியில் பணம் கிடைக்குதானு முயற்சி செய்யலாம், அப்படி இல்லனாலும் வெளியே எங்கையாவது போய் வாடகைக்கு இருந்துக்கலாம் என்று சொல்ல பாக்கியா என்ன நீங்க என்னை நம்பி இவ்வளவு பெரிய ஆர்டர் கொடுத்திருக்காங்க சந்தோஷப்படுவீங்கன்னு நினைச்சா இப்படி சொல்றீங்க, இதனை நல்லபடியாக செய்து வர பணத்தில் வீட்டை மீட்டெடுப்போம் நம்ம வீடாக மாற்றுவோம் என சந்தோஷத்துடன் சொல்கிறார்.

அடுத்து செழியன் மாலினியை சென்று சந்திக்க அவர் நேத்து உங்கள புடிச்சி இருக்குன்னு சொன்னதும் நீங்க கிளம்பி போயிட்டீங்க போன் கூட எடுக்க மாட்றீங்க அதனாலதான் மேனேஜரிடம் சொல்லி உங்கள வர வைத்தேன். என்னை சுத்தி நிறைய பேர் இருக்காங்க ஆனா உங்க கிட்ட பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் கவலை இல்லை இதுக்கு அப்புறம் சந்திக்க முடியாமல் கூட போகலாம், இன்னைக்கு நான் என் மனசுல இருக்குறத பேச போறேன் என சொல்ல செழியன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

8 minutes ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

10 minutes ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

13 minutes ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago