Sirakadikka Aasai Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை முத்து காப்பாற்றிய நிலையில் கண் விழித்த மீனா முத்துவை கட்டிக் கொள்ள பிறகு முத்து ஒன்னும் இல்ல மீனா என்று சொல்லி சமாதானம் செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து பாட்டி அங்க வர மீனா பாட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்கலங்க பிறகு பாட்டி மீனாவுக்கு தலையை துவட்டி விட நானும் தான் கிணத்துல குதிச்சேன் ஆனா என்னை யாரும் கண்டுக்கல என சொல்லி முத்து புலம்புகிறார்.
அதன் பிறகு மீனா, முத்து, பாட்டி மற்றும் அன்னம் அக்கா என நால்வரும் கோவிலுக்கு வருகின்றனர். முத்து விட்டா என்னை சாமியார் ஆக்கிடுவீங்க போல என்று சொல்ல இப்ப மட்டும் என்ன அந்த வாழ்க்கை தானே வாழ்ந்துட்டு இருக்க என அன்னம் அக்கா நக்கல் அடிக்கிறார்.
பிறகு சாமி கும்பிட்டு முடித்ததும் பாட்டி மீனா மற்றும் முத்துவை கோவிலை சுற்றி வர சொல்லிவிட்டு ஐயரிடம் இவர்களின் ஜாதகத்தை காட்ட அவர் இன்னைக்கே சாந்தி முகூர்த்தத்தை வச்சுக்கலாம், சாந்தி முகூர்த்தம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். இதனை தொடர்ந்து பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தம் என சொல்ல முத்து இதுக்குத்தான் நான் ஊருக்கே வரமாட்டேன்னு சொன்ன நான் கிளம்புறேன் என சொல்லி கிளம்ப பாட்டி போடா போ இனிமே இந்த பாட்டி முகத்தில் முழிக்காத என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
நாச்சியா வளத்த பையனால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போச்சு என்ற பேர் எனக்கு கிடைக்கட்டும், இந்த பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் என் பையன் அண்ணாமலை கல்யாணம் பண்ணி வச்சான், ஆனா இவ இன்னைக்கு நட்டாத்துல நிக்கிறா, அந்த பாவம் எல்லாம் யாருக்கு என் பிள்ளைக்கு தானே வந்து சேரும், உனக்கு என்ன கவலை இருக்கு என சொல்ல முத்து இப்ப என்ன பண்ணனும் என கேட்கிறார்.
இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும் என பாட்டி சொல்ல சரி நீங்க ஒன்னு முடிவு எடுத்துட்டா அது நடக்கிற வரைக்கும் விடமாட்டீங்க உங்க இஷ்டம் போல பண்ணுங்க என சொல்ல மீனாவும் வெட்கத்தில் நெளிகிறார்.
மறுபக்கம் அம்மாவும் கிரிஷ்ம் சென்னைக்கு வந்திருக்க ரோகிணி பியூட்டி பார்லரை சுற்றி காட்டி பத்திரிக்கையை எடுத்து கொடுத்து மாப்பிள வீட்டுல நான் எனக்கு அம்மாவே இல்லன்னு சொல்லி இருக்கேன் அதனால நீ கல்யாணத்துக்கு வரக்கூடாது கல்யாணம் முடிஞ்ச பிறகு நானே வந்து பார்க்கிறேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் என் மாமியார் தான் பியூட்டி பார்லர் திறக்க பணம் கொடுத்தாங்க அதனாலதான் அவங்க பேர வச்சிருக்கேன் எனவும் சொல்கிறார்.
ஒரு ஓரமா நின்னு உன்னுடைய கல்யாணத்தைப் பார்த்துக்கிறேன் என அவரது அம்மா சொல்ல ரோகினி நீங்க வந்தா என்னால சந்தோஷமா கல்யாணம் பண்ண முடியாது. நீங்க வரக்கூடாது என சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…