Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடிபோதையில் இருக்கும் கோபி. கண் கலங்கி அழும் ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழில் கோபி பாக்கியாவுக்கு செய்த துரோகத்தை பற்றி பேசி கண் கலங்க அமிர்தா ஆறுதல் சொல்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி கோபி போதையில் விழுந்து கிடக்கும் விஷயத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து ராமமூர்த்தியை வாங்க நாம ஆட்டோல போய் கூட்டிட்டு வரலாம் என கூப்பிடுகிறார். ஆனால் அவரும் நாம எதுக்கு போய் தேடனும் எங்கேயாவது விழுந்து கிடக்கட்டும் என சொல்லிவிட பிறகு செழியனை கூப்பிட்டு வாடா நம்ம போய் உங்க அப்பாவ கூட்டிட்டு வரலாம் என சொல்ல அவரும் தயங்குகிறார்.

பிறகு ஈஸ்வரி பாக்கியாவை கட்டிப்பிடித்து கண்கலங்க பாக்கியா செழியனை போய் கூட்டிட்டு வா என சொல்ல ஈஸ்வரி நானும் கூட வரேன்னு சொல்லி கிளம்பி செல்கிறார். அதற்கு அடுத்ததாக இருவரும் இணைந்து கோபியை தேடி செல்கின்றனர்.

கோபிக்கு போன் போட்டு எங்க இருக்கீங்க அப்பா என கேட்க செழியனா யாருன்னு கோபி அதிர்ச்சி கொடுக்கிறார். கூடவே ஈஸ்வரியும் பேச என்ன ஆம்பள குரல் பொம்பள குரல்னு மாத்தி மாத்தி பேசுற என்று கேட்கிறார். பிறகு ஒரு வழியாக வெளியே கோபியை கண்டுபிடிக்க கோபி தள்ளாடிக் கொண்டிருக்கிறார்.

பிறகு இருவரும் கோபியை காரில் அழைத்து வரும்போது ராதிகா போன் செய்ய கோபி ராதிகா தான் பண்ணுவா என சும்மாவே விட மாட்டா என அழுது புலம்புகிறார். அவ வந்த நேரம் இவன் வாழ்க்கையே இப்படி ஆயிடுச்சு என ஈஸ்வரி சொல்ல நூறு சதவீதம் கரெக்ட் என கோபி சொல்கிறார்.

பிறகு ராதிகா கோவப்பட்டு நான் அங்க போய் பார்க்கிறேன் என சொல்ல அவருடைய அம்மா இப்போதைக்கு நீ எதுவும் பண்ண வேணாம் போய் ரெஸ்ட் எடு என சமாதானம் செய்கிறார்.

இந்த பக்கம் வீட்டுக்கு கூட்டி வந்த கோபி போதையில் தள்ளாடி கொண்டே வர இதை பார்த்த ராமமூர்த்தி இது எல்லாம் பாக்குறதுக்கு போய் சேர்ந்துடலாம் போல இருக்கு என்று கலங்குகிறார்.

அதன் பிறகு எழிலும் செழியனும் சேர்ந்து கோபியை மேலே ரூமுக்கு கொண்டு சென்று படுக்க வைக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update

Baakiyalakshmi Episode Update