Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குஷியான கோபி.. திட்டி தீர்த்த ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியிடம் அப்பா எதுக்கு மா தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கிறாரு என்று கேட்க அவர் என்ன பண்ணாரு என்று ஈஸ்வரி கேட்க அந்த லேம்ப் போஸ்ட்டுக்கு இவர் எதற்கு பொண்ணு பார்க்கணும் என்று கேட்க ஈஸ்வரி பழனிச்சாமியை பாராட்டி பேச கோபி கடுப்பாகி நானும் பிசினஸ் நல்லா டெவலப் பண்ணா பெரிய வீடா கட்டுவேன் அதெல்லாம் ஒரு விஷயமா என பேசுகிறார்.

நான் மட்டும் ராதிகாவை கல்யாணம் பண்ணும் போது என்னை அப்படி திட்டுனீங்க இப்போ இவ்வளவு பெரிய பசங்கள வெச்சிக்கிட்டு கல்யாணம் பண்றது தப்பு இல்லையா என கேட்க இவ்வளவு பெரிய பசங்களா பழனிச்சாமிக்கும் பசங்க இல்ல நம்ம சந்திராவுக்கும் பசங்க இல்ல நீ என்ன சொல்ற என கேட்க சந்திராவா என்று கோபி கேட்க அப்போதுதான் ஈஸ்வரி பழனிச்சாமி சந்திரா வைத்தான் பெண் பார்க்க வந்தார் என்ற விஷயத்தை சொல்கிறார்.

இதைக் கேட்ட கோபி உற்சாகமாகி ஒரு வழியாக ஈஸ்வரி மற்றும் அங்கிருந்த செழியனை சமாளித்து எழுந்து வருகிறார். ஓ அப்போ பாக்யாவை பெண் பார்க்க வரலையா நம்ம ஆளு தப்பிச்சா… சந்திராவா யாரோ? யாரையோ கட்டிக்கிட்டு போகட்டும் என கோபி ஆட்டம் போட்டு சந்தோஷமாக மேலே ரூமுக்குச் சென்று இந்த விஷயத்தை ராதிகாவிடம் சொல்ல ராதிகா மயூவை அனுப்பிவிட்டு கோபியிடம் சண்டை போடுகிறார்.

பாக்யாவுக்கு கல்யாணம்னு சொன்னதும் வருத்தமா இருந்தீங்க, இப்போ பாக்யாவுக்கு கல்யாணம் இல்லைன்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருக்கீங்க அப்போ உங்க சந்தோஷம் வருத்தம் எல்லாமே பாக்கியாவை வச்சு தான்.. நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கணும் என கோபப்பட்டு ராதிகா கோபியை திட்டி விட்டு வெளியே வருகிறார்.

அதன் பிறகு செழியன் ஜெனியிடம் ரூமில் ஐ லவ் யூ சொல்ல அவர் ஆச்சரியப்பட்டு செழியனை கலாய்த்து ஐ லவ் யூ டூ என சொல்கிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் இனியா படித்துக் கொண்டிருக்க எல்லோரும் இனியாவுக்கு பக்கபலமாக இருப்பதாக பேசி நல்ல மார்க் எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.

அதன் பிறகு பாக்கியா பழனிச்சாமி அம்மாவுக்கு சாப்பாடு சமைத்து எடுத்துக் கொண்டு பழனிச்சாமி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசி சாப்பாடு கொடுத்துவிட்டு பழனிச்சாமியிடம் கோபி வந்து பேசிய விஷயம் பற்றி கேட்டு மன்னிப்பு கேட்கிறார்.

மேலும் பழனிச்சாமி அது ஒன்னும் இல்லங்க உங்க வீட்டுக்கு வரக்கூடாது, உங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னாரு என்று சொல்ல பாக்யாவின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
Baakiyalakshmi Episode Update