Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்பாவின் பிறந்தநாள் விழாவை நிறுத்த கோபி செய்யும் வேலை.. கதிர் எடுத்த முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 16.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இரண்டு சீரியலும் இணைந்து தற்போது மஹா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் கடைக்கு போன் போட்டு பேசிவிட்டு மூர்த்தி ஆகியோர் எழில் கோபியிடம் பேசாததை பற்றி பேசுகின்றனர். அதேபோல் தனது அண்ணன் எப்போதும் அண்ணியுடன் சிடுசிடுவென இருக்கிறார் சரியாக முகம் கொடுத்து பேச மாட்றார் என கூறுகிறார். மூர்த்தி ராத்திரி நேரத்தில் அவருக்கு போன் வருகிறது யார்கிட்ட தான் பேசுகிறார் தெரியல என சொல்கிறார்.

இந்த பக்கம் ஜீவா கதிர் எழில் மற்றும் செழியன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். செழியன் போன் வருகிறது என வெளியே சென்றுவிட கதிர் எழிலிடம் காதல் கதை குறித்து கேட்க அவர் அமிர்தாவை தான் காதலிக்கிறேன் என சொல்கிறார். வீட்டுல ஒத்துக்குவாங்களா எனக் கேட்க ஒத்துக்க மாட்டாங்க என கூறுகிறார். அப்படினா எங்கேயும் ஓடிப் போய் விடாத நேரா குன்றக்குடிக்கு வந்துடும் நாங்க பார்த்துக்குறோம் என சொல்கிறார்.

அதன்பிறகு கோபிக்கு ராதிகா போன் செய்ய வீட்டுக்கு வெளியே சென்று பேசுகிறார். நாளைக்கு டீச்சர் வீட்டில் பிறந்த நாள் விழாவுக்கு போகணும் ஞாபகம் இருக்கா என கேட்கிறார். கோபி எதுவும் தெரியாதது போல் பேச கடுப்பான ராதிகா நாளைக்கு நீங்க வந்தே ஆகணும் இல்லனா இந்த ஜென்மத்துக்கும் உங்ககிட்ட பேச மாட்டேன் என போனை வைத்து விடுகிறார். பிறகு தன்னுடைய நண்பர் சதீஷ்க்கு போன் போட்ட கோபி ராதிகா சொன்னதைப் பற்றி சொல்லி புலம்புகிறார். அப்போ நாளைக்குத்தான் உன் ட்ராமாவுக்கு எண்டு கார்டு என்று சொல்ல இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தால் தானே இதெல்லாம் நடக்கும் எப்படி நிறுத்துறேன் பாரு என கூறுகிறார். கோபி இவ்வாறு பேசி விடுவதை கதிர் கேட்டு விடுகிறார்.

கதிர் பின்னாடி நிற்பதை பார்த்த கோபி பின்னர் அவரிடம் எதை எதையோ சொல்லி சமாளித்து உள்ளே சென்று விடுகிறார். பின்னர் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்க அப்போது அங்கு வந்து உட்கார்ந்த கோபி நெஞ்சுவலி போல டிராமா போட்டு கீழே படுத்து விடுகிறார். இதனால் குடும்பத்தார் எல்லோரும் பதற கதிர் இது ட்ராமா என மூர்த்திக்கு சொல்ல பிறகு முதல் உதவி என்ற பெயரில் கோபி படாத பாடு படுத்துகிறார் மூர்த்தி. வாயோடு வாய் வைத்து கதை எழுத முயற்சி செய்ய கோபி பதறியடித்து எழுந்து உட்காருகிறார். பிறகு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய ஒன்றுமில்லை வெறும் கேஸ் தான் என சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

அதன்பிறகு கோபி வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி, பாக்கியா, இனியா என எல்லோரும் நான் ரொம்ப பயந்துட்டேன் என சொல்லி வருத்தப்படுகின்றனர். பிறகு இப்ப எதுவும் இல்லை நல்லாத்தான் இருக்கேன் என சொல்லிவிட்டு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் என மேலே செல்கிறார் கோபி. போட்ட டிராமா எல்லாம் வேஸ்டா போச்சு நாளைக்கு எனக்கு உண்மையாவே ஹார்ட் அட்டாக் வந்து விடும் போல என புலம்பிக் கொண்டே செல்கிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா மாமனாரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார். பிறகு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அவர் கையில் பணம் கொடுத்து ஆசிர்வாதம் செய்கிறார். அதன் பிறகு தனமும் சென்று ஆசிர்வாதம் வாங்கி வாழ்த்துக்கூற அவருக்கும் பணம் கொடுத்து ஆசிர்வாதம் செய்கிறார்.

பிறகு எழில் தாத்தாவை வெளியே அழைத்து வர அந்த நேரத்தில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு வாய் சரியாகிவிட்டது பார்த்து சந்தோஷப்படுகிறார். பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் இதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். கோபி என் அப்பாவைப் பார்த்து முயற்சி செய்யச் சொல்லி கூற அவரும் பேச முயற்சி செய்கிறார். மூர்த்தியின் பெயர் சொல்ல முயற்சி செய்ய அவரால் ஒரு அளவிற்கு பேச முடிகிறது. இதனால் குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சி அடைய இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 16.05.22

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 16.05.22