Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி நடவடிக்கையால் சந்தேகப்படும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் .. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 13.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இவை இரண்டும் மகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒருமணிநேரம் எபிசோடுகள் ஆக ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா வீட்டிற்கு தனத்துடன் சென்று மாமாவின் பிறந்தநாள் பிரச்சனைக்கு அழைக்கிறார் பாக்கியா. ராதிகாவும் கண்டிப்பாக வருவதாக வாக்குக் கொடுக்கிறார். அதன் பின்னர் கோபி ராதிகா வீட்டிற்கு வர அவரிடம் டீச்சர் வந்து அவருடைய மாமனாரின் பிறந்தநாள் பங்சனுக்கு கூப்பிட்டு இருந்தாங்க. நாளைக்கு நாம மூணு பேரும் போயிட்டு வரலாம் என சொல்ல கோபி நீ வேணா போயிட்டு வா நான் வரவில்லை என கூறுகிறார். ஏன் எதுக்கு என ராதிகா கேட்க நான் வரலைன்னு கோபி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

கல்யாணம் பண்ணிக்கிறேனு சும்மா வாய் வார்த்தையா சொல்லிக்கிட்டு இருக்க மாதிரி தான் இருக்கு, எதுக்கு வர மாட்டீங்க எனக்கு இப்ப காரணம் தெரிஞ்சு வேண்டும் என ராதிகா கட் அண்ட் ரைட்டாக கேட்க எனக்கு அவங்கள யாரையுமே தெரியாது அப்படி இருக்கும் போது நான் எப்படி வரமுடியும் என சொல்ல அதான் நான் இருக்கேன்ல என ராதிகா கூறுகிறார். நான் வரல, என்ன கேட்ட நீங்கள் போகாமல் இருப்பது தான் நல்லது என சொல்லுவேன் என கோபி சொல்ல நாளைக்கு நாம கண்டிப்பா போறோம். இல்லனா நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன். நீங்க இங்க வரவும் தேவையில்லை என ராதிகா சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார். என்னடா இது பிரச்சனை பெரிய பிளானா போட்டு சமாளிக்கணும் போலலையே என கோபி புலம்புகிறார்.

இந்த பக்கம் வீட்டில் செழியனும் ஜீவாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜீவா கூட்டுக் குடும்பம் பற்றி பேச செழியன் கூட்டுகுடும்பம் எனக்கு பிடிக்காது என பேசுகிறார். பிறகு பாக்யாவில் மாமனாருக்கு ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக மோதிரம் வாங்கலாம் என முடிவு செய்து மூர்த்தி ஜீவாவை பணம் எடுத்து வரச்சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு ஜீவா செழியனிடம் பேங்க் எங்க இருக்கு என கேட்க செழியன் நான் அழைத்துச் செல்கிறேன் எனக் கூட்டிச் செல்கிறார்.

பிறகு மூர்த்தி தனம் மற்றும் கதிர், ஐஸ்வர்யா ஆகியோர் மோதிரம் வாங்குவதற்காக கடைக்கு செல்ல அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் உடன் எவ்வளவு என கேட்க 400 ரூபாய் கொடுங்க என கூறுகிறார். பணம் அதிகமாக கேட்டதால் இவர்கள் ஆட்டோ வேண்டாம் எனத் அந்த ஆட்டோ டிரைவர் ஓவராக பேசுவதால் பிறகு கதிர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த நேரத்தில் எழில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி உங்களை உடனே கூட்டிச் செல்கிறேன் எனச் சொல்லி பக்கத்தில் சென்று தன்னுடைய நண்பனின் காரை வாங்கி கொண்டு வருகிறார்.

ராதிகா சொன்ன வார்த்தைகள் செம டென்ஷனாகி வீட்டுக்கு வந்த கோபி பாக்கியாவிடம் உன்னை உன் பிரெண்ட்ஸ் யாரையும் கூப்பிட வேண்டாம் என்றுதானே சொன்னேன். அப்படி இருக்கும்போது நீ எதுக்கு ராதிகாவை கூப்பிட்ட என கேட்க நான் ராதிகாவை கூப்பிட்டது உங்களுக்கு எப்படி தெரியும் என பாக்யா கேட்க உன்னோட பயங்கர டென்ஷனா போச்சு என சத்தம் போடுகிறார். நான் சொல்வது எதையும் கேட்கவே மாட்டியா என திட்டுகிறார்.

இந்த நேரத்தில் மூர்த்தி மற்றும் தனம் ஆகியோர் வந்து கோபியை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். அதன் பிறகு தனம் பாக்கியாவிடம் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக தானே இருக்கீங்க என கேட்க பாக்கியா நாங்க சந்தோஷமாகத்தான் இருக்கும் என சொல்ல செல்வி ரெண்டு பேருக்கும் எப்பவும் சண்டை தான் என சொல்லி விடுகிறார். பாக்யா செல்வியை அமைதியாக இரு என்று அடக்குகிறார்‌. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோ மூர்த்தி, தனம், கதிர் ஆகியோர் கோபியை சுற்றி ஏதோ ஒன்று நடக்கிறது. ஏதோ சரியாக படவில்லை என பேசுகின்றனர். தனம் செல்வியும் ஏதோ சொல்ல வந்தீங்க ஆனா பாக்கியா அண்ணி சொல்ல விடவில்லை என கூறுகிறார்.

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 13.05.22
Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 13.05.22