தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ், அதேபோல் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இவர்கள் இருவருக்கும் நல்ல தோழியாக இருந்து வருபவர் திருநங்கை மிலா.
சமீபத்தில் மூவரின் படப்பிடிப்பு ஒன்றிற்காக குமிழி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது இயக்கத்தில் வந்த கார் நிலைதடுமாறி இவர்களின் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது மிலாவுக்கு மட்டும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளாகி கார் சேதமடைந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
