இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் குறித்த உண்மை தெரிய வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா ஹோட்டலை திறக்க திறப்பு விழாவிற்கு இனியாவை சுதாகர் அனுப்பாமல் இருக்கிறார்.
குடும்பத்தினரை வைத்து பாக்யா கடை திறப்பு விழாவை செய்ய இனியா வந்து பாக்யாவிடம் நீ ரெஸ்டாரன்ட் எழுதி கொடுத்து தான் எனக்கு கல்யாணம் பண்ணியா, எனக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சு அவர் வற்புறுத்தி உன்னிடம் இருந்து ரெஸ்டாரன்ட்டா வாங்கினாரா என்று கேட்க அப்படியெல்லாம் இல்லை நானே விருப்பப்பட்டு தான் கொடுத்தேன் என சொல்லுகிறார்.
மறுபக்கம் இனியா வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டு இருக்க சுதாகரிடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்ல சுதாகர் கேள்வி என்று சொல்லுகிறார். ரெஸ்டாரன்ட் விஷயத்துல என்ன நடந்துச்சு எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட் போர்ஸ் பண்ணி வாங்கினீங்களா அது எப்படி நீங்க போர்ஸ் பண்ணி வாங்கலாம் என்று கேள்வி கேட்கிறார். இதற்கு சுதாகர் பதில் என்ன சொல்லப் போகிறார்?பாக்யா எப்படி சமாளிக்க போகிறார்? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
