ரெஸ்டாரண்டுக்கு சீல் வைக்க பாக்யா அதிர்ச்சியாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி சதி திட்டத்தை தீட்டி ஆனந்த் என்ற செப்பை பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்.
பக்ரீத் ஆர்டரை பாக்யா எடுத்திருக்கும் நிலையில், அதில் ஏதாவது செய்து பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என திட்டம் போட்டு கெட்டுப் போன இறைச்சிகளை பயன்படுத்தி பிரியாணி செய்து அது அனைவருக்கும் டெலிவரியும் செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவராக வந்து ரெஸ்டாரண்டில் பெரிய பூகம்பமே வெடிக்கிறது.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் கடை முன் திரண்டு வர பொதுமக்கள் ஆவேசமாக பேசினர். இறுதியாக உணவுத்துறை அதிகாரிகள், கெட்டுப்போன இறைச்சி சமைத்ததால் உணவகத்திற்கு சீல் வைக்கின்றனர். இதனால் பாக்யா பெரும் அதிர்ச்சியில் உள்ளார். இந்தப் பெரும் துயரத்தில் இருந்து குடும்பத்தினர் மீள போவது எப்படி? கோபியின் சதி வேலையை பாக்கியா கண்டுபிடிப்பாரா? மீண்டும் பாக்கியா ரெஸ்டாரன்டை எப்படி திறக்கப் போகிறார்? என்ற பல கோணங்களில் பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
