ஒரு பக்கம் கோபி அரஸ்ட் ஆகி போலீஸ் ஸ்டேஷனில் இருக்க இனியா குற்றவுணர்ச்சியில் அழுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா நான் போலீஸ்ல போய் சரண்டர் ஆகி விடுகிறேன் என்று சொல்ல கோபி யாரு எதுவும் பண்ண வேண்டாம் நீங்க இப்போதைக்கு இங்கு இருக்க கூடாது பிளான் பண்ண படி ட்ரிப்புக்கு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல செழியன் மற்றும் உயில் நீங்களும் வாங்க எல்லாரும் ஒண்ணா போகலாம் என்று கூப்பிடுகிறார் எல்லாரும் ஒண்ணா போன போலீஸ்க்கு சந்தேகம் வரும் இங்கு யாரு அவங்க கேக்குறதுக்கு பதில் சொல்றது என்று சொல்லுகிறார். ஈஸ்வரி நீ வரலைன்னா நான் போக மாட்டேன் என சொல்ல கோபி அனைவரையும் சமாதானப்படுத்த பார்க்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாரும் பேசிக் கொண்டே இருக்க கோபி தயவு செய்து அமைதியா இருங்க இனியாவ நம்ம ப்ரொடெக்ட் பண்ணி ஆகணும் சேர்ந்து போனது சுதாகர் ஓட பையன் டார்கெட் ஃபுல்லா இனியா மேல தான் இருக்கும் அதனால இப்ப இனியாவ நம்ம காப்பாத்தணும்னா கூட்டிட்டு போய் தான் ஆகணும் வர பிரச்சனையை நான் பாத்துக்குறேன் நீங்க கூட்டிகிட்டு போங்க என்று சொல்ல ஈஸ்வரி நீ வரலைன்னா நான் போகவே மாட்டேன் என உட்கார்ந்து விட கோபி அம்மாவை நான் பார்த்துக்கிறேன் நீங்க இனியா கூட்டிட்டு போங்க என்று சொல்லி வழி அனுப்பி விட்டு வந்து உட்கார்ந்து இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து நிற்க இருவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். உங்க பொண்ணு இனியாவும் அவங்க அம்மாவும் இங்கே என கேட்கின்றனர்.
எதுக்கு இனியா கேக்குறீங்க என்று சொல்ல ஏன் உங்களுக்கு எதுவுமே தெரியாதா என்று போலீஸ் கேட்கின்றனர் உங்க மருமகள் நித்திஷ் இறந்தது கூட உங்களுக்கு தெரியாதா என்று கேட்க டிவியில பார்த்தோம் என கோபி சொல்லுகிறார் அப்போ வேற எதுவும் உங்க குடும்பத்துல இருக்குறவங்க சொல்லலையா என்று கேட்க என்ன சொல்றீங்க என்று கேட்கின்றனர் நிதிஷ கொலை பண்ண இனியாவும் கூட இருந்த பாக்கியா எங்கே என கேட்க அவர் என் பொண்ண இப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டா என சொல்லுகிறார் அத நாங்க கண்டுபிடிச்சுக்குறோம் எங்க இருக்காங்க என்று கேட்க கோபி மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். இவங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணுங்க என்று சொல்ல கோபி அம்மாவை விட்டுடுங்க என்ன வேணா கூட்டிட்டு போக என்று சொல்ல கோபியை அழைத்துச் செல்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இனியாவை பற்றி கேட்க கோபி தெரியாது என சொன்னதால் போலீஸ் அவரை அறைந்து விடுகின்றனர். உன்கிட்ட இருந்து எப்படி உண்மையை வாங்கணும்னு எனக்கு தெரியும் ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்லனா உன் குடும்பமே சின்னாபின்னாமாயிடும் நாளைக்கு ஒரு நாள்தான் டைம் அதுக்குள்ள உண்மைய சொல்லு என்று சொல்லிவிட்டு மிரட்டி விட்டு செல்கிறார். மறுபக்கம் இனியா பாக்யாவிடம் அழுது கொண்டு நான் உங்களுக்கு சின்ன வயசுல இருந்து பிரச்சனையை மட்டும் தான் தேடி கொடுத்து இருக்கேன் நீங்க போக வேணாம்னு சொல்லியும் நான் நித்திஷ் பார்க்க போயிருக்க கூடாது நான் கொலை பண்ணிட்டேன் நான் என் கையால கொலை பண்ணிட்டேன் என சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். இது மட்டும் இல்லாம டாடியும் பாட்டியும் தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது என்று சொல்லுகிறார். நான் இப்பவே டாடி கிட்ட பேசணும் என்று சொன்ன செழியன் போன ஆன் பண்ண நம்ம ஈஸியா டிரஸ் பண்ணிடுவாங்க அதனால இப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம் என சொல்ல எழில் என்னோட பிரண்டு கிட்ட சொல்லி நான் பேச சொல்லி இருக்கேன் ஏதாவது முக்கியமான விஷயம் எல்லாம் சொல்லுவா இப்போதைக்கு நாம எதுவும் நினைக்க வேண்டாம் என்று சொல்ல இல்லை நேத்து போலீஸ் வந்து இருப்பாங்க டாடி கிட்ட பேசி இருப்பாங்க என்று இனியா சொல்லுகிறார்.
பிறகு ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க செல்வியும் ஆகாஷும் வருகின்றனர் செல்வியை பார்த்து எழுந்து நின்று ஈஸ்வரி கண்கலங்கி என்னாச்சு பாத்தியா செல்வி இந்த வீட்ல எப்படி நடக்குது பாத்தியா கோபி அரெஸ்ட் பண்ணிட்டாங்க என்று சொல்லி அழ செல்வியும் கண்கலங்கி வீட்டுக்குள் வந்து அழுது கொண்டே ஆறுதல் சொல்லுகிறார். ஈஸ்வரி என்ன பேசுகிறார்?அதற்கு செல்வியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
