சுதாகர் சொன்ன வார்த்தையால் கோபி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்று எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியா எழில் செழியன் என்ன நாலு பேரை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருப்பாங்க என்று சொல்லி கூப்பிட என்ன விஷயமா இருக்கும் என்று கேட்கிறார். நித்திஷ் அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே இவர்களின் நால்வரும் அங்கு கிளம்பி செல்ல ஏற்கனவே சந்திரிகா மற்றும் சுதாகர் இருவரும் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வந்தவுடன் எதுக்கு அவங்க வீடு தேடி போய் அடிச்சிட்டு வந்தீங்க என்று கேட்க கோபி பாக்யா அதிர்ச்சி அடைகின்றனர்.
யாரை சொல்றீங்க என்று கேட்க எழில் என் தங்கச்சி கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தா வேற என்ன செய்வாங்க அதனால தான் அடிச்சோம் என்று சொல்லுகிறார் ஆனால் சந்திரிகா அவன் எதுவும் பிரச்சனை எல்லாம் பண்ணல கூப்பிடு தான் போனான் என்று சொல்ல உடனே பாக்யா ரெஸ்டாரண்டில் வந்து பிரச்சனை பண்ணதை சொல்லுகிறார். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருக்க கோபி அவங்க பையன பத்தின உண்மையை மறைத்து கல்யாணம் பண்ணிட்டாங்க என்று சொல்ல உடனே சுதாகர் என்ன கோபி சொல்றீங்க எல்லாத்தையுமே நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேனே என்று சொல்லுகிறார்.
உடனே மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியாக எப்படி பொய் சொல்றீங்க சுதாகர் என்று கேட்க நீங்க பணத்துக்கு ஆசைப்பட்டது என கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க என்று சொல்ல சந்திரிகாவும் இனியாவை பற்றி தப்பாக பேச இருவருக்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது உடனே போலீஸ்காரர் இருவரையும் சமாதானப்படுத்தி இனிமே நீங்க அவங்க விஷயத்துல தலையிட வேண்டாம் அவங்களும் உங்க விஷயத்துல தலையிட மாட்டாங்க என எழுதி கொடுங்க என்று சொல்லிவிட்டு அனுப்பி வைக்கிறார். பிறகு சந்திரிகாவிடம் சுதாகர் பண்ணது தான் கரெக்டா இப்போதைக்கு அவங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தாங்கன்னா நீங்க குடும்பமே உள்ள போயிடுவீங்க அதனால நித்திஷ் கேஸ் முதல்ல முடியட்டும் அதுக்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறார்.
நால்வரும் வீட்டுக்கு வந்தவுடன் ஈஸ்வரி என்னாச்சு என்ன விஷயம் என்று கேட்க இவர்கள் நித்திசை அடித்த விஷயத்தை சொல்லுகின்றனர். அது மட்டும் இல்லாம ஏற்கனவே நித்திஷ் பத்தின உண்மையை அவங்க அப்பா கிட்ட ஏற்கனவே சொல்லிட்டதா சொல்லி பொய் சொல்லி மாத்தி மாத்தி பேசுறாங்க என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
உடனே கொஞ்ச நேரத்தில் இனியா வேலைக்கு கிளம்புகிறேன் என்று சொல்லி வெளியில் வர செழியன் மாமனார் வருகிறார். இனியாவிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அவர் உள்ளே வர செழியன் இடம் என்ன பேசுகிறார். அதற்கு செழியன் பதில் என்ன? குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர். என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.