ஈஸ்வரி சொன்ன வார்த்தை, பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியா வீட்டு முன் கோபி சபதம் எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியா வீட்டிற்கு முன் வந்து கத்துகிறார். உடனே செழியன் இனியா ஈஸ்வரி என மூவரும் வெளியே வர செழியன் கத்தாதீங்கப்பா எல்லா பாத்துகிட்டு இருக்காங்க என்று சொல்ல என்னை ஜீப்ல ஏற்றும் போதும் எல்லாம் பாத்துட்டு தான் இருந்தாங்க மானம் எல்லாமே போயிடுச்சு இதுக்கப்புறம் என்ன இருக்கு என்று சொல்லி அவளை கூப்பிடு என்று சொல்லுகிறார்.

உடனே பாக்யா வெளியே வர உடனே ராதிகாவின் அம்மா உள்ளே சென்று ராதிகாவை கூட்டி வந்து நிற்கிறார். டிவில என் பொண்டாட்டி பொண்ணு முகத்தை பார்க்க வச்சுட்டியே என்று கத்த நீங்க எதுக்கு என்னோட ரெஸ்டாரன்ட் விஷயத்தில் தலையிடறீங்க அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார், பிரச்சனையா என்னோட அப்பா ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு பண்ணவிடாம பண்ணல என்று கேட்க அதை நான் பண்ணல உங்க அம்மா எடுத்த முடிவு, உங்க எல்லாருக்கும் எப்படி அதிர்ச்சியா இருந்ததோ எனக்கும் அப்படித்தான் இருந்தது என்று பாக்யா பதிலுக்கு பேசுகிறார். உடனே கோபி உன்னை என்னக்கி கல்யாணம் பண்ணனும் அன்னைக்கு என்னுடைய நிம்மதி போயிடுச்சு என்று சொல்ல உடனே ஈஸ்வரி இதுக்கு மேல பேச வேணாம் உள்ள போ பாக்யா என்று சொல்லுகிறார்.

ஆனால் பாக்கியம் இல்லாத ரொம்ப நாளா இந்த கேள்வியை கேட்டுக்கிட்டு இருக்காரு இதற்கான பதில் தெரிந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க பிறந்து அதுவும் பெரிய பையன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன் கூட வாழ விருப்பம் இல்ல டைவர்ஸ் கொடு என்று சொல்லிட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க இப்ப இருந்த தைரியம் உங்க அப்பா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லும் போது புடிக்கலைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே என்று கேட்கிறார். உங்க வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும் என் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும் உங்களால தான் என் வாழ்க்கை நாசமா போச்சுன்னு நான் தான் சொல்லணும் என்று சொல்லுகிறார் பாக்யா.

உங்கள ஜெயிலுக்கு அனுப்பாம நான் விடமாட்டேன் என்று சபதம் எடுக்க நானும் ஜெயிலுக்கு போறேன் அப்படி போனா போயிட்டு வந்து உன்ன அடியோடு அழிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு கோபி கிளம்புகிறார். உடனே வீட்டில் இருக்கும் மூவரும் வழக்கம் போல் கோபிக்கு சப்போர்ட் பண்ணி பேச அவர் எவ்ளோ மனசு கஷ்டப்பட்டு இருப்பாரு என்று செழியன் சொல்லுகிறார். உடனே ஜெனி அன்னைக்கு நடந்த ஒரு லக்கில தான் ஆன்ட்டிக்கு ஒன்னும் ஆகல ஆனா இப்ப வரைக்கும் ரெஸ்டாரண்டுக்கு சரியா சாப்பிட வர மாட்டாங்க அதெல்லாம் எப்படி சரி பண்ண முடியும் அதெல்லாம் ஏன் உங்க ரெண்டு பேருக்கும் புரியவே மாட்டேங்குது என்று ஜெனி கேட்க அதெல்லாம் இவங்களுக்கு புரியாது ஜெனி இவங்களுக்கு அப்பா பாசம் கண்ணை மறைக்குது என்று சொல்ல உடனே ஈஸ்வரி பாக்யா என்று கூப்பிட உங்கள மறந்துட்டேன் அத்தை உங்களுக்கு புள்ள பாசம் கண்ணை மறைக்குது என்று சொல்லுகிறார்.

உடனே நீ இவ்வளவு கோவமா பேசினா அப்பாவுக்கு அப்புறம் பெருசா இதெல்லாம் பண்ணா என்னம்மா பண்ணுவ என்று கேட்க கெட்டவரு அவரே அவ்வளவு பண்ணும் போது நல்லவ நான் பண்ண மாட்டேனா இதனால நான் எவ்வளவு நஷ்டம் ஆனாலும் பரவால்ல நான் ஜெயிலுக்கு அனுப்பி தண்டனை வாங்கி கொடுக்காம விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அனைவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரிக்கு இட்லி வைக்க எனக்கு ஒன்னு போதும் என்று சொல்லுகிறார் நைட்ல பசி எடுக்கும் அத்தை இன்னொன்னு சாப்பிடுங்க என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை பசி எடுக்கட்டும் பசி எடுத்து போய் சேருறேன் என்று சொல்லுகிறார்.

செழியன் வந்தவுடன் பாக்யா சாப்பிட கூப்பிட எனக்கு ஒன்னும் வேண்டாம் என்றோ சொல்லிவிட்டு ஜெனி இடம் ஒரு வீடியோவை காட்டுகிறார். அது என்ன வீடியோ? அதற்கு ஈஸ்வரியின் கேள்வி என்ன? பாக்யா என்ன சொல்லப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial toady episode update
jothika lakshu

Recent Posts

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…

7 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

10 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட சினேகா..!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…

10 hours ago

மகளின் பிறந்த நாளை கொண்டாடிய ரித்திகா..!

பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…

10 hours ago

முத்துவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் விஜயா.. சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போக காரணம் என்ன… வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

16 hours ago

மதராசி : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago