தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தினமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஈஸ்வரி ஜெயிலுக்கு போக கடைசி நொடியில் மயூ சொன்ன சாட்சியால் அவர் ரிலீஸ் ஆகி வெளிய வந்தார்.
இதையடுத்து கோபி அம்மாவை வந்து சந்தித்து பேச இனி எனக்கு மகனே இல்லை எனக்கு ஒரே ஒரு மகள் தான்.. பாக்கியா என்று பேரதிர்ச்சி கொடுத்து கோபியை தலை முழுக உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த வார ஞாயிற்றுக்கிழமை 2:00 மணிநேர ஸ்பெஷலுக்கு பாக்கியலட்சுமி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரம் முழுவதும் ஒரே அழுகாட்சியாக சென்ற நிலையில் இதை இரண்டு மணி நேரம் எபிசோட் காமெடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
