Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகளின் பிறந்த நாளை கொண்டாடிய ரித்திகா..!

baakiyalakshimi serial rithika latest video

பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா இவருக்கு சீரியல் நடித்திருக்கும் போதே திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சீரியலில் நடித்தார்.

ஆனால் சில மாதங்களில் சீரியலில் இருந்து விலகி இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அவருக்கு நிலா என பெயர் சூட்டியுள்ளனர்.

சமீபத்தில் குழந்தை கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருந்த வீடியோவை ரித்திகா வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர் இதற்கான வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரித்திகா வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.