தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சதீஷ்.
அவருடைய நடிப்பு சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வரும் நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து தயவுசெய்து செய்தியிலிருந்து வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதநிலையில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது பலரும் கோபி குறித்து கேள்வி எழுப்ப அடுத்த செடுலில் யார் இருக்காங்க இல்லை என்பது எனக்கு தெரியாது, என் நானே இருப்பேனா என்று கூட எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.இதன் மூலம் கோபி இந்த சீரியலில் இருக்காரா இல்லையா என்ற கேள்விக்கு ராதிகா மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார். எனவே ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
View this post on Instagram