Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்யாவிற்கு வந்த பிரச்சனை, செழியன்,இனியா கேட்ட கேள்வி, வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!

baakiyalakshimi serial promo update

பாக்யாவை பிரச்சனையில் சிக்க வைக்க சுதாகர் திட்டம் போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா பாக்யா வீட்டில் இருக்க சுதாகர் இனியாவை அழைத்து வர திட்டம் போட்டு வருகிறார் ஆனால் எதுவும் பலிக்காமல் இருக்க இனியா ஒரு கட்டத்திற்கு மேல் நித்திஷிற்கு விவாகரத்து கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார்.

ஆனால் அப்போதும் நிதிஷ் அடங்காமல் இனியாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வர என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பான திருப்பங்களுடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் சுதாகர் ஒரு ஆளை ரெடி செய்து பாக்கியாவின் ஹோட்டலுக்கு சென்று அட்வான்ஸ் ஆக கொஞ்சம் அமவுண்டை கொடு என சொல்ல அவரும் பாக்கியாவிடம் சென்று கொடுக்கிறார்.

பிறகு பாக்கியா போன் பண்ணி நீங்க இன்னும் கொஞ்சம் அமௌன்ட் கொடுக்கற மாதிரி இருக்கும் என சொல்ல நான் தான் அஞ்சு லட்சம் கொடுத்துவிட்டேனே என்று சொல்லுகிறார் ஆனால் பாக்யா நீங்க அம்பதாயிரம் தான் கொடுத்தீங்க என சொல்லுகிறார். உடனே அந்த நபர் போலீஸ் உடன் வர போலீஸ் விசாரிக்கின்றனர் பாக்யா 50,000 தான் கொடுத்தார் என்று சொல்ல இனியா மற்றும் செழியன் இருவரும் எந்த மண்டபம் என்று விசாரிக்க பிறகு அது போல ஒரு மண்டபமே இல்லை என தெரியவர போலீஸ் அவரை அறைகின்றனர். உடனே அவர் தப்பித்து ஓடி விடுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial promo update
baakiyalakshimi serial promo update