Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எம்ஜிஆர் கெட்டப்பில் போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி,வைரலாகும் போட்டோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

கோபி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வரும் இவர் அடுத்த 100 எபிசோடுக்கு காமெடி எல்லாம் பார்க்கவே முடியாது, ஒரே சீரியஸ் & எமோஷனல் தான் என தெரிவித்தார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்படியே அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே இருப்பதாக சொல்லி கமெண்ட் அடித்து வருகின்றனர்.