Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவை கண்டித்த தாத்தா.கடுப்பான ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

இன்றைய எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்ததும் ராதிகா தன்னை அடித்த விஷயத்தை சொல்ல கோபி என்னம்மா சொல்ற ராதிகாபா உன்னை அடிக்க வந்தா என்ன கேட்க அப்ப நான் சொல்றத நம்பலையா என இனியா கேட்க அப்படி இல்ல என சமாளிக்கிறார்.

அதன் பிறகு கோபி ராதிகாவை தனியாக அழைத்துச் சென்று உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்ல இனியா எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி இருப்பார் என ராதிகா கோபப்படுகிறார். அவ சின்ன பொண்ணு அவள அடிக்க கை வாங்கினது தப்பு தானே என கேட்க நான் மயூவை எப்படி பார்க்கிறேனோ அப்படித்தான் அவளையும் பார்க்கிறேன். அவளை கண்டிக்க எனக்கு உரிமை இல்லையா என கேட்க கோபி நான் அப்படி சொல்ல வரல இனியாவும் சின்ன பொண்ணு தான். நான் ஆரம்பத்துல உங்க வீட்டுக்கு வந்தப்போ மயூ எப்படி என்கிட்ட இருந்து விலகி இருந்தா அதே மாதிரி தான் இப்போ இனியா இருக்கா கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்க என கூறுகிறார்.

இதனால் ராதிகா இனிமே நான் இனியாவை எதுவும் சொல்ல மாட்டேன் போதுமா, அவளை நான் கண்டிக்க கூட மாட்டேன் என கூறுகிறார். பிறகு கீழே வந்ததும் ராதிகா இனியாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

பிறகு இனியா தாத்தாவிடம் பார்த்தீர்களா எப்படி மன்னிப்பு கேட்க வைத்தேன் என சொல்ல இதெல்லாம் சரியில்ல இது தப்பு பண்ற என இனியாவை கண்டிக்கிறார். என்னதான் இருந்தாலும் அவங்க வயசுல பெரியவங்க மரியாதை கொடுக்கணும் என கூறுகிறார். எல்லா தப்பையும் பண்ணுது உங்க அப்பன் அவன் தான் இந்த கதைக்கு வில்லன், அவன் மேல கோவப்படாம மத்தவங்க மேல கோபப்படுற என கூறுகிறார்.

அடுத்து ஜெனி தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு வீட்டில் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும் எந்த சர்ச்சில் ஞானஸ்தானம் எடுக்கணும் என எல்லாமே முடிவு பண்ணி வச்சிருக்காங்க என சொல்ல ஈஸ்வரி இந்த வீட்டில எல்லா குழந்தைகளும் எப்படி நடந்துச்சு அப்படித்தான் இந்த குழந்தையின் வளரனும் நெத்தியில விபூதி வைக்கணும் குலதெய்வ கோவிலுக்கு மொட்ட போடணும் அடுத்து திருச்செந்தூர் கோவிலுக்கு மொட்ட போடணும் என கறாராக கூறுகிறார்.

இந்த நேரத்தில் ராதிகாவின் ஆபீஸிலிருந்து பாக்கியாவுக்கு போன் வருகிறது. தமிழ்நாடு குறித்து உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் ஒரு மணி நேரத்தில் இங்கே வாங்க என சொல்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update