இனியாவை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா. கோபி செய்த வேலை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவின் ஸ்கூல் வேன் விபத்துக்குள்ளானதாக நிகிதாவின் அம்மா போன் போட்டு சொல்ல இதனால் பதறும் பாக்கியா எழிலை கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறார். அதற்குள் கோபி ஸ்கூலுக்கு வந்து இனியாவுக்கு என்னாச்சு எனக்கு விசாரிக்க அடி ஏதும் இல்லை ஜெனரல் செக்கப் தான் பண்ணிட்டு இருக்காங்க என கூறுகின்றனர்.

பாக்கியா மற்றும் எழிலும் அடுத்து ஸ்கூலுக்கு வந்து விசாரிக்க அவர்களிடமும் இதே பதிலை சொல்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க கடைசியில் கோபி பாக்யாவை பார்த்துவிட்டு இனியாவை பாக்கியா கண்ணில் காட்டக் கூடாது என முடிவெடுத்து செக்கப் நடக்கும் இடத்தில் சென்று இனியாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

பிறகு பாக்யா கோபி போல் இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து செல்வதற்குள் இவர்கள் கிளம்பி விடுகின்றனர். பிறகு இனியா பற்றி விசாரிக்க அவளை அவரது அப்பா கூட்டிச் சென்று விட்டதாக சொல்ல பாக்யா அழுதபடி கீழே இறங்கி வர அதற்குள் கோபி வீட்டுக்கு வந்து விடுகிறார்.

இதனால் பாக்கியா என் பொண்ணை பார்க்க எனக்கு உரிமை இல்லையா என ரோடு எல்லாம் அழுதபடி வர எழில் அவளை சமாதானம் செய்கிறார். வீட்டுக்கு வந்ததும் கோபியின் காரை பார்த்த பாக்யா அது எப்படி என் பொண்ணு என் கண்ணுல காட்டாம கூட்டிட்டு வரலாம் எனக்கு அவ மேல உரிமை இல்லையா நான் அவளை பார்த்தே ஆகணும் என ராதிகா வீட்டிற்கு விறுவிறுவென நடந்து வருகிறார் பாக்யா.

வீட்டுக்கு வந்ததும் மாமனாரை பார்த்து மாமா இனியாவ பாக்கணும் என சொல்ல அவர் இனியா இனியா கூப்பிடுகிறார். பாக்கியாவும் இனியா வெளியே வா அம்மா உன்னை பார்க்கணும் என சொல்ல கோபி ரூமுக்குள் இருந்து இனியாவை வெளியே வரவிடாமல் உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு வெளியே வந்து அவள் என் பொண்ணு அவள உன்னால பார்க்க முடியாது என பாக்யாவுடன் சண்டை இடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

17 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

17 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

17 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

17 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

17 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

20 hours ago