bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா அகிலன் என எல்லோரும் ஹேமா இருக்கும் லொகேஷனை தேடி அழைக்கின்றனர்.
கண்ணம்மா அந்த போட்டோவில் இருக்க ஆள் எந்த வண்டியில் இருக்காரு என தேடலாம் என்று ஐடியா கொடுக்க பிறகு அதன்படி தேட அப்போதும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அகிலன் செக்போஸ்டில் இருக்கும் போலீஸிடம் உதவி கேட்க அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுங்க என கைவிரித்து விடுகின்றனர்.
இப்படியான நிலையில் லைவ் லொகேஷன் முடிவடைய வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே இருக்கும் நேரத்தில் வண்டி மூவ் ஆக லொகேஷன் நகர்கிறது. இதனால் எந்த வண்டி நகர்கிறது என்பதை வைத்து வண்டியை சுற்றி வளைக்கின்றனர். அந்த வண்டியில் இருந்து ரவுடிகள் அகிலனை அடிக்க கண்ணம்மா ஓடிச் சென்று போலீஸ் அழைத்து வர அவர்கள் தப்பி ஓடுகின்றனர்.
அடுத்து பின்னாடி இருந்து ஹேமா மீட்கப்பட அவரது மண்டையில் அடிபட்டு ரத்தம் வருவதை பார்த்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த பக்கம் பாரதிக்கு எதிர்பாராத விதமாக கையில் அடிபடுகிறது. கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்து நொறுங்க வீட்டில் யாருக்கு ஏதோ ஆபத்து என மனதுக்குள் தோன்றுகிறது. இருந்தாலும் இப்போதைக்கு போனை ஆன் செய்ய வேண்டாம் என முடிவெடுக்கிறார்.
இந்தப் பக்கம் வெண்பா பதற்றத்தோடு ரவுடிக்கு போன் போட்டு விஷயம் என்னாச்சு பார்டர் கிராஸ் பண்ணியாச்சா என கேட்க கண்ணம்மாவும் அவளது ஆட்களும் வந்து ஹேமாவை காப்பாத்திட்டாங்க என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
ஹேமாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்ல அவளை ICU அழைத்துச் செல்கின்றனர். இந்த பக்கம் வெண்பா பதற்றத்தோடு இருக்க ரோஹித் நீ ஏதோ தப்பு பண்றேன்னு தெரியுது ஆனா எது பண்ணாலும் நல்லா யோசிச்சு பண்ணு, பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் என எச்சரித்து விட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…
Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…
I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…