Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடும் கோபத்தில் ராதிகா.சிக்கி தவிக்கும் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா உங்களுக்கு நான் முக்கியமா அவங்க முக்கியமா என கேள்வி கேட்க கோபி இது என்னடா கேள்வி நீ தான் முக்கியம் அதுக்கு அப்புறம் தான் மத்தவங்க எல்லோரும் என கோபி சொல்ல ராதிகா கோபித்துக் கொண்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்தி விடுகிறார்.

பிறகு கோபி மயூரா மற்றும் இனியாவை உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்க அப்போது வெளியே வரும் ராதிகா மயூவை உள்ளே வா என இழுத்துச் செல்கிறார். இந்த பக்கம் ஈஸ்வரி கணவருக்காக காத்துக் கொண்டிருக்க அப்போது தாத்தா வந்ததும் பாக்யா இனியா எப்படி இருக்கா என்ன ஏது என்று விசாரிக்கிறார். பிக்னிக் போகும் விஷயத்தை கேள்விப்பட்டு யாருடன் போரா எப்போ போறா எப்போ வருவா என நீங்க கேளுங்க என பாக்கியா கூறுகிறார்.

அதன் பிறகு பாக்யாவிடம் வேலை செய்யும் ராகினி என்பவரின் மகனுக்கு நாய் கடித்து விட்டதாக தெரியவர அந்த ஏரியா அசோசியேட் தலைவரிடம் சென்று இது குறித்து கேட்க அவர் நக்கலாக பதில் சொல்ல பாக்கியா அவரிடம் சண்டை போடுகிறார். தேர்தல் வருது இல்ல அப்ப பார்த்துக்கிறோம் என கூறிவிட்டு வருகிறார்.

இந்தப் பக்கம் வாக்கிங் சென்று வரும் கோபி மயூவிடம் பேசி விட்டு பிறகு இனியாவிடம் வந்து பேசிவிட்டு கிச்சனுக்கு சென்று ராதிகாவின் தோள் மீது கை வைக்க அவர் கோபப்பட்டு கையை தூக்கி வீசுகிறார். இப்ப எதுக்கு கோவமா இருக்க என கோபி கேட்க நடந்தது எதுவும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? உங்க பொண்ணு தப்பு பண்ணா அதை கண்டிக்காம என்ன வந்து திட்டிட்டு இருக்கீங்க என கோபப்படுகிறார்.

பிறகு அதே கோபத்தை அப்படியே கொண்டு வந்து மயூரா மீது காட்டுகிறார். எதுக்கு இப்ப குழந்தைகிட்ட கோபமா பேசிட்டு இருக்க என கோபி கேட்க என் பொண்ணு கிட்ட நான் பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு என்ன என கேட்கிறார். உங்க பொண்ணு மேல தான் எனக்கு உரிமை இல்லை என் பொண்ணு நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நீங்க எதுக்கு கேக்குறீங்க என சத்தம் போட இந்த நேரத்தில் கோபியின் அப்பா வருகிறார்.

பிறகு கோபி இனியாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல கோபிநாத் அப்பா பெரியவங்க சண்டையில் குழந்தைங்க பாதிக்கப்படக்கூடாது என ராதிகாவுக்கு அறிவுரை வழங்குகிறார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update