Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு போனா கோபி. பாக்யா கொடுத்த ஷாக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஹோட்டலுக்கு போன பாக்கியா இனியாவிடம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்து என அறிவுரை கூறுகிறார். அடுத்தபடியாக ஆபீஸில் எழில் அமுதாவிடம் அப்பா அம்மாவுக்கு என் மேல நம்பிக்கை போயிடுச்சு என சொல்ல அமிர்தா அது தான் இல்லை கொஞ்சம் பயப்படுகிறார்கள் அதுதான் என கூறுகிறார்.

அப்பா வீட்டை விட்டு போன அதிர்ச்சியில் இருந்து இன்னும் யாரும் வெளிவரவில்லை அதற்குள் நம்முடைய கல்யாணம் பற்றி பேசினால் அது நன்றாக இருக்காது அம்மாவிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொன்னேன். அவங்க கொஞ்சம் டைம் கேக்குறாங்க என்ன சொல்லி அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே என எழில் கேட்க இந்த நேரத்தில் வர்ஷினி வந்துவிடுகிறார்.

எழில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வர்ஷினி கோபப்பட்டு கதவை சாத்திக்கொண்டு சென்றுவிட பிறகு பழம் புடவை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு எழில் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி ஈஸ்வரிக்கு வயது குறைவாக இருப்பது போல தெரிகிறது என ஐஸ் வைத்து அவருக்கு பட்டுப் புடவை கொடுக்கிறார்.

அடுத்து வீட்டில் ராதிகா கொரியர் டெலிவரி பாய் பழைய வீட்டு அட்ரஸ்க்கு சென்று போன் அடிக்க அவரிடம் ஆபீசில் வைத்திருங்கள் நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என சொல்ல அவர் முடியாது என கூறுவதால் கோபப்படுகிறார். பிறகு அதே கோபத்தோடு கோபியிடம் வந்து எல்லாம் உங்களால் தான் வீட்டு அட்ரஸை மாற்ற வேண்டும் இன்னும் ஏன் எதுவும் பண்ணாம இருக்கீங்க என சத்தம் போடுகிறார்.

இதனால் கோபி இப்பவே நேராக போய் வீட்டு ரேஷன் கார்டுடன் வருகிறேன் என செல்கிறார். வீட்டில் செழியன் இனியா என எல்லோரும் இருப்பதை பார்த்து முதலில் பம்பிய கோபி பிறகு பாக்யாவிடம் கேட்டது கொடுக்க மாட்டியா என சத்தம் போட தாத்தா அப்படி என்ன கேட்ட, என்னத்த கொடுக்கணும் என கேள்வி கேட்க அத உங்க மருமகள் கிட்ட கேளுங்க என கூறுகிறார். பிறகு ரேஷன் கார்டு வேண்டும் பெயர் நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என சொல்ல தாத்தா தர முடியாது என கூறுகிறார்.

அடுத்து கோபி பாக்கியாவிடம் பாக்யா போய் எடுத்துட்டு வா என அதிகாரத்தோடு சொல்ல வா போனு சொல்ல நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது, மரியாதை ரொம்ப முக்கியம் என ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update