Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆர்டரை வாங்கிய பாக்கியா.. ராதிகாவை குழப்பும் அம்மா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் அவரது அம்மா கோபி அவங்க குடும்பத்தோட பேசறத அடியோட நிறுத்திடனும் அதுதான் உனக்கும் உன்னுடைய எதிர்காலத்துக்கும் நல்லது. அவங்க இங்க வந்துட்டு போறதும் இவரு அங்க போயிட்டு வரதுமா இருந்தா அது உன்னுடைய வாழ்க்கைக்கு தான் பிரச்சனையாக அமையும் என கூறுகிறார். அதனால அவங்க வீட்ல இருக்கவங்க யாரோடும் பேசக்கூடாதுன்னு ஸ்ரிட்டா சொல்லிடு என சொல்ல இது எல்லாம் எப்படி சொல்ல முடியும் என ராதிகா கேட்க ஆரம்பத்திலேயே பேசுறது தான் சரியென அவரது அம்மா கூறுகிறார்.

அதன் பிறகு இந்த பக்கம் பாக்கியா மற்றும் ஜெனி இருவரும் ராஜசேகரை சந்தித்து பேச அவர் மினி ஹாலுக்கான கேட்டரிங் ஆர்டரை கொடுக்கிறார். நல்லபடியாக செய்து பேரை காப்பாத்தணும் என சொல்ல நிச்சயமா நல்லபடியா சமைச்சு தருவோம் என பாக்கியா வாக்கு கொடுக்கிறார். அடுத்ததாக சமைக்கும் இடத்துக்கு வந்து தன்னுடன் சமைக்க தயாராக உள்ள பெண்களை அழைத்து அவர்களிடம் பேசுகிறார்.

இந்த பக்கம் ராதிகா, கோபி அவரது குடும்பத்தினர் கல்யாணத்துக்கு ஆடைகளை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபி நன்றாக இருக்க ராதிகா என்னை ஏது என கேட்க இனியாவை பற்றி பேசுகிறார். இனியாவுக்கு எல்லாமே நான்தான் பார்த்து பார்த்து பண்ணுவேன். மத்த ரெண்டு பசங்களுக்கு நான் ஷாப் பண்ண மாட்டேன். ஆனா இனியா எதுவாக இருந்தாலும் என்னை கூட்டிட்டு போங்க டாடினு என்கிட்ட தான் வந்து நிப்பா. அவள நினைச்சா தான் கஷ்டமா இருக்கு என சொல்ல ராதிகா நீங்க எப்பவும் இனியாவுக்கு செய்யுறதை செய்து கொண்டே இருக்கலாம் என கூறுகிறார்.

பிறகு மயூவிடம் இனியாவுக்கு எடுத்த டிரஸ் எங்க இருக்கு என கேட்க ராதிகாவின் அம்மா இனியா என்ன இப்ப கல்யாணத்துக்கா வரப்போறா அவளுக்கு எதுக்கு டிரஸ் என்ன சொல்ல கோபியின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update