Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி.. ராதிகாவிடம் பேசிய கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டிற்கு சென்றுள்ள கோபி உனக்காக தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். உனக்காகத்தான் டிவோர்ஸ் வாங்கினேன். உன்கிட்ட சில விஷயங்கள் மறைச்சிருந்தாலும் உன் மேல நான் வச்சிருக்கேன் அன்பு உண்மையானது அதில் எந்த பொய்யும் கிடையாது. தங்குவதற்கு தூங்குவதற்கு இடம் இல்லாமல் தவிச்சிட்டு இருக்கேன். எனக்கு இருக்க ஒரே நம்பிக்கை நீ தான். நல்லா யோசிச்சு ஒரு முடிவா சொல்லு என கோபி இங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு வர கோபி உள்ளே இருந்து வெளியே செல்வதை பார்த்து அதிர்ச்சடைந்து ராதிகா வீட்டுக்குள் சென்று சத்தம் போடுகிறார். என் பையன் மேல தான் நான் அதிகம் கோபப்பட்டேன் அவனால ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை நாசமா போச்சுன்னு கஷ்டப்பட்டேன் ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தவன் நேரா இங்க வரானா என்ன அர்த்தம் இதுக்கெல்லாம் நீயும் உடந்தையா திட்டம் போட்டு எல்லாத்தையும் பண்ணியா என கோபப்படுகிறார். ராதிகா நடந்த விஷயங்களை சொல்ல முயற்சி செய்தும் கிராம மூர்த்தி பேச விடாமல் கோபப்பட்டு பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் ராதிகாவின் அண்ணன் சும்மா நிறுத்துங்க உங்க பையன் என்ன தப்புக்காக எல்லாரும் இங்க வந்து கத்துக்கிட்டு இருக்காதீங்க. கோபி எதுக்காக வந்தாரு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க. பாக்கியா தான் அவருடைய மனைவின்னு தெரிஞ்சதும் ராதிகா அவரை விட்டு விலக எவ்வளவு முயற்சி செய்தார் ஆனால் அவர்தான் விடாம இங்க வந்துட்டு இருக்காரு. நீங்க எதுவாக இருந்தாலும் உங்க பையன் கோபி கிட்ட பேசுங்க என சொல்ல அசிங்கப்பட்டு நிற்கும் ராமமூர்த்தி இருவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வருகிறார்.

பிறகு ராதிகாவின் அண்ணன் இவங்க எல்லாரும் கொடுக்கிற டார்ச்சர் தான் கோபி இங்க வந்ததுக்கு காரணம் அவர் ரொம்ப பாவம் என சொல்ல ஒரு விதத்துல நீ சொல்றதும் உண்மைதான் என ராதிகா கூறுகிறார். இதனால் ராதிகாவின் மனம் மாறுகிறது.

வீட்டில் பாக்யா எல்லோருக்கும் சாப்பிட தோசை வைத்துள்ள நிலையில் யாரும் சாப்பிடாமல் ஒவ்வொருவராக கோபமாக எழுந்து சென்றுவிட ராமமூர்த்தி அவங்கள பத்தி எல்லாம் கவலைப்படாத எவ்வளவு நாளைக்கு இப்படி சாப்பிடாம இருக்க முடியும்? என ராதிகா வீட்டில் நடந்த விஷயத்தை மனம் வருந்தி எதுவும் வெளியில் சொல்லாமல் அவரும் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார்.

பிறகு பாக்கியா வருத்தத்தோடு இருக்க எழில் பால் எடுத்து வந்து கொடுத்து அவரை குடிக்க சொல்லி ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update