Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதறி அழுத பாக்கியா.. ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஈஸ்வரி இனியா செழியன் என எல்லோரும் தன்னை பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசியதால் கிச்சனில் செல்வியிடம் அழுது புலம்புகிறார் பாக்யா. நீ எடுத்த முடிவு எந்த தவறும் இல்லை நீ எந்த தப்பும் பண்ணல எல்லோரும் போகப்போக உன்னை புரிஞ்சிப்பாங்க என செல்வி ஆறுதல் கூறுகிறார்.

நானா அவருக்கு விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொன்னேன்? நானா அவர இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொன்னேன்? இனிமே அவரோட ஒரே ரூம்ல இருக்க முடியாது வேற ரூம்ல இருந்து இருக்காங்க என்று தானே அவருடைய துணிகளை எடுத்து வந்தேன் என பாக்கியா சொல்லி அழுகிறாள். மொத்தமா உடைந்து போன இந்த குடும்பத்தை திரும்பவும் எப்படி ஒட்ட வைக்க போறேன்? என அழுகிறார்.

இந்த பக்கம் ஈஸ்வரி பாக்கியா பண்ணது ரொம்ப பெரிய தப்பு. இப்போ வெளியே போன கோபி நேரா அந்த ராதிகா வீட்டுக்கு தான் போவான். ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நாம என்ன பண்றது? என்ன நடந்தாலும் இந்த ஜென்மத்துல கோபி பாக்கியா தான் புருஷன் பொண்டாட்டி. மத்த எதையும் என்னால ஏத்துக்கவே முடியாது என சொல்ல அவருடைய கணவர் அதெல்லாம் நடக்காது நான் பார்த்துக்கிறேன் நீ பாக்கியவ எதையும் சொல்லாத அவர் ஏற்கனவே நொந்து போய் இருக்கா என கூறுகிறார்.

பிறகு ராதிகா வீட்டில் அவரும் அவருடைய அண்ணனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கோபி பற்றி என்ன முடிவு எடுத்திருக்க என கேட்க ஏற்கனவே எடுத்த முடிவுதான் மும்பைக்கு கிளம்ப வேண்டியதுதான் என ராதிகா சொல்கிறார். இந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வருகிறார். மயூவுக்கு உடம்பு எப்படி இருக்கு என விசாரிக்க பரவாயில்ல என ராதிகா கூறுகிறார். பிறகு ராதிகாவின் அண்ணா வீட்டுக்கு போனீங்களா என்னாச்சு என கேட்க மொத்தமா வெளியே வந்துட்டேன். பெரிய பிரச்சனையாகிடுச்சு. இத்தனை வருஷமா எந்த குடும்பத்துக்காக உழைச்சு போட்டேனோ அதே குடும்பம் என்ன வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுச்சு. தங்களது விட்டு தூங்குறதுக்கு இடம் இல்லாமல் காரிலேயே சுத்திக்கிட்டு இருக்கேன் என சொல்கிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update