Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்பாவின் பேச்சால் அதிர்ச்சியடைந்த கோபி.. கடைசியில் காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எல்லா தப்பையும் நீ தான் பண்ண. வீட்ல இவ்வளவு பிரச்சனை நடக்கிறதுக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் நீ தான் இந்த வீட்டை விட்டு போகணும் என கோபியின் அப்பா கோபியை பார்த்து சொல்ல அவர் அதிர்ச்சியடைகிறார்.

வழக்கம் போல கோபி நான் எதுக்கு இந்த வீட்டை விட்டு போகணும்? இது என்னுடைய உழைப்பால் உருவான வீடு 40 லட்ச ரூபாய் பணம் கொடுத்து இருக்கேன் என பேசுகிறார். ஜெனி இன்னொரு பக்கம் ஆன்ட்டி எனக்காக இந்த வீட்டில இருங்க பொறுமையா பேசிக்கலாம். நீங்க இல்லாம என்னால இந்த வீட்டில் இருக்க முடியாது என கூறுகிறார். உடனே செழியன் ஜெனியை இழுத்து அவங்க ஈகோவுல இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க நீ எதுக்கு உன்னுடைய சென்டிமென்ட் வேஸ்ட் பண்ற என சத்தம் போடுகிறார். உனக்கு ஆன்ட்டி இந்த வீட்டை விட்டு போறது இல்ல கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. உனக்கு அப்பாவ தான் பிடிக்கும்னு தெரியும் அதுக்காக இப்படி இருக்காத என திட்டுகிறார்.

இன்னொரு பக்கம் எழில் நீங்க என்னதான் பணம் போட்டு வாங்கி இருந்தாலும் அது இயங்குவதற்கு காரணம் எங்க அம்மா தான். இதை அவங்க சொல்ல மாட்டாங்க ஆனா கண்டிப்பா நான் சொல்லிக் காட்டுவேன் என பேசுகிறார். எல்லா வீட்டிலும் இப்படித்தான் என்னமோ உங்க அம்மா மட்டும் பெரிய தியாகி மாதிரி பேசுற என கோபி சொல்ல எங்கம்மா மட்டுமில்ல எல்லா அம்மாவும் தியாகி தான் எத்தனையோ வீட்டுங்கள்ல கணவர் இல்லாமல் அவர்கள் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க அது எல்லாம் என்ன சொல்லுவீங்க என கேட்கிறார்.

அதன் பிறகு கோபி தான் வீட்டை விட்டு வெளியே போகணும் என அவரது அப்பா சொல்வது மட்டுமல்லாமல் வெளியே போடா என கையை பிடித்து இழுத்துச் செல்கிறார். பிறகு பாக்யாவிடம் வந்த கோபி போதுமா கோர்ட்டுல என்ன அசிங்கப்படுத்தின இப்போ எங்க வீட்ல எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்துற. உன்னுடைய டிராமா எல்லாம் முடிஞ்சிடுச்சா இல்ல இன்னும் இருக்கா? இனிமே நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்கக்கூடாது உன்னிடம் முடித்து தூக்கிட்டு கிளம்பு என பெட்டியை தூக்கி சென்று வெளியே வீசுகிறார்.

வீசிய வேகத்தில் பெட்டி திறந்து கொள்ள அதற்குள் மொத்தமும் கோபியின் சட்டை இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதை கவனிக்காமல் கோபி பாக்கியாவை கண்டபடி பேசிக் கொண்டிருக்கிற செழியன் அப்பா அங்க பாருங்க என சொல்ல பெட்டியை பார்த்து கோபி அதிர்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update