Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவை நிற்க வைத்து கேள்வி கேட்ட பாக்கியா..ராதிகா செய்த செயல்..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு போன பாக்கியா ராதிகாவின் நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். சத்தியம் எனக்கு எதுவும் தெரியாமத்தான் இதெல்லாம் நடந்தது என ராதிகா அழுகிறார். ஆனால் பாக்கியா எதையும் நம்பாமல் இருக்கிறார். அப்போ ஹாஸ்பிடல்ல அவருடைய மனைவியின் நீங்க இருந்தது என்ன அர்த்தம் என கேட்க அது சூழ்நிலை என ராதிகா சொல்ல தப்பு எல்லாத்தையும் செஞ்சுட்டு சூழ்நிலை மேல பழியை தூக்கி போடுறதா என பாக்யா கேள்வி கேட்கிறார்.

நானும் ஒரு நாடக வலைக்குள் சிக்கிட்டேன். கோபி உங்களோட கணவர் என தெரிந்ததும் அவரை விட்டு விலக முடிவு பண்ணிட்டேன். சத்தியமா உங்க வாழ்க்கையில நான் குறுக்க வர மாட்டேன். நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு எனக்கு புரியுது என ராதிகா சொல்கிறார். பிறகு மயூரா கீழே இறங்கி வந்து ஆன்ட்டி எனக்கு ஃபீவர் எப்படி கொதிக்குது பாருங்க என பாக்கியாவின் கையை எடுத்து கழுத்தில் வைக்கிறார்.

பிறகு ராதிகா நான் சொல்றதெல்லாம் உண்மைதான் நம்புங்க என மயூராவின் தலையில் வைத்து சத்தியம் செய்கிறார். என்னை என் பொண்ணையும் சபிச்சிடாதீங்க நீங்க ரொம்ப நல்லவங்க நீங்க சாபம் விட்டா கண்டிப்பா அது நடக்கும் என ராதிகா கதறி அழுகிறாள். ஆனால் பாக்யா மயூராவின் தலையில் கையை வைத்து நிரம்ப நல்லா இருப்ப. பெரியவங்க பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ. என் பொண்ணு இனியா அழுதாலே என்னால தாங்க முடியாது நீ அழக்கூடாது என கூறுகிறார். பிறகு பாக்கியா இங்கிருந்து கிளம்பி வருகிறார்.

பாக்கியா சமைக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டிருக்க அப்போது அவருடைய மாமனார் வந்து பாக்கியா என் பொண்ணு மாதிரி இப்படி ஒரு பொண்ணு எனக்கு பொறந்திருக்கு கூட தானே நான் பல நாள் கவலைப்பட்டு இருக்கேன். ஆனால் அந்த படுபாவி இப்படி பண்ணி எல்லோருடைய சந்தோஷத்தையும் கெடுத்துட்டான் என கோபியை திட்டுகிறார். நான் சொல்றதை மறுப்பேச்சு பேசாம கேளு என்னோட கிளம்பி வீட்டுக்கு வா. அந்த வீட்டில உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு, அவனை வெளிங அனுப்பி விடலாம் என சொல்ல பாக்கியா தயவுசெய்து என்னை திரும்ப திரும்ப இந்த விஷயத்தை சொல்லி உங்க பேச்சுக்கு மறுபேச்சு பேச வைக்காதீங்க.

என்னை உங்க பொண்ணு மாதிரி சொல்றீங்களே உங்களுடைய பொண்ணுக்கு இப்படி எது நிலைமை வந்து இருந்தா போயி அது வீட்ல என்ன நடந்தாலும் சலிச்சிட்டு வாழ்னு சொல்லி அனுப்புவீர்களா? என கேட்க ராமமூர்த்தி பதில் சொல்ல முடியாமல் அமைதியாக விடுகிறார். அந்த வீட்டுக்கு திரும்ப என்னால வர முடியாது என பாக்யா கூறுகிறார். இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி பாக்யாவிடம் வந்து எல்லோரும் நீ வரணும்னு ஆசைப்படுறாங்க வீட்டுக்கு வா என கேட்க திரும்பவும் இந்த தப்ப பண்ண மாட்டேன் எனக்கு வாக்குறுதி கொடுங்க என பாக்யா கேட்க கோபி திகைத்து நிற்கிறார்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update