baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட் கோபியின் அப்பா எழுத்து போன் போட்டு பாக்யாவை பத்திரமா பாத்துக்கோ அவள தனியா விட்டுடாத ஒரு நிமிஷத்துல மனசு எந்த மாதிரி வேணாலும் முடிவெடுக்கும் என அறிவுரை கூறுகிறார். அவ ரொம்ப தெளிவா இருக்கா ஏதோ முடிவெடுத்தது தான் இவ்வளவு தெளிவா பேசி இருக்கா என சொல்கிறார்.
அதன் பிறகு இந்த பக்கம் வீட்டில் இனியா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க பிறகு ஜெனியிடம் அம்மா நாளைக்கு வந்து விடுவாங்களா? அம்மா இல்லாம நல்லாவே இல்ல அவங்க டெய்லி ரூமுக்கு வரும்போது எனக்கு தனி ரூம் வேணும் அவங்கள திட்டி சண்டை போடுவேன். என் ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லுவேன். அம்மா கூட எப்பயும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன். ஆனா அம்மா திரும்பத் திரும்ப வந்து பேசிக்கிட்டே இருப்பாங்க இப்போ அம்மா என் கூட இருந்தா போதும் அவங்க என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை என அழுது புலம்புகிறார். அம்மா வரவரைக்கும் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என இனியா அடம் பிடிக்கிறார்.
பிறகு கோபி எழுந்து வெளியே வந்து இனி ஆரம்பித்து போகலாம் என பார்த்தால் அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து அப்படியே வந்து விடுகிறார். பிறகு செழியன் ரூமுக்கு சென்று பார்த்தல் செழியன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு கீழே இறங்கி அப்ப அம்மா ரூமுக்கு சென்று பார்க்க அவர்களும் தூங்காமல் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கோபி வருத்தப்படுகிறார்.
கோபி மேலே வந்து படுத்த பிறகு செழியன் உள்ளே வந்து ஏசி போட்டுவிட்டு செல்கிறார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஈஸ்வரி வந்து போர்வையை போர்த்தி விட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி கண்கலங்கி அழுகிறார். தன் மீது குடும்பத்தார் வைத்திருக்கும் அன்பை நினைத்து கோபி மனம் மாறுவாரா? என எதிர்பார்க்க வைக்கிறது.
மறுநாள் காலையில் எழில் வீட்டுக்கு வர எல்லோரும் பாக்கியம் பற்றி விசாரிக்க ஏதோ இருக்காங்க என கூறுகிறார். அம்மா என்ன முடிவு எடுத்தாலும் அவங்க கூட நாம எல்லாரும் நிக்கணும் என எழில் சொல்ல அப்படி என்ன முடிவு எடுக்கப் போறா? என்னைக்கா இருந்தாலும் அவை இந்த வீட்டுக்கு வந்து தான் ஆகணும். கோபி தான் அவளோட புருஷன் அதை என்னைக்கும் மாத்த முடியாது தானே என பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…