செல்வி மகனை இனிய காதலிக்க, ஈஸ்வரி ஜெனி மற்றும் செழியன் இடம் கேள்வி கேட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் தொடங்குவதற்கான வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க கோபி பாக்கியாவை வியந்து பார்க்கிறார் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு போன மாசம் தான் முடிவு பண்ணி உங்க கையாள அட்வான்ஸ் கொடுத்தா அதுக்குள்ள எல்லா வேலையும் எப்படிமா செய்ய முடியுது. நானும் ஒரு கிளவுட் கிச்சன் ஆரம்பிச்சேன் எவ்வளவு பெரிய வேலை வந்தது தெரியுமா என்று சொல்ல அதெல்லாம் பாக்யா செஞ்சிடுவாப்பா என்று சொல்லுகிறார் நாளைக்கு நீ ஃபங்ஷனுக்கு வரல கோபி என்று சொல்ல வரமா என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் ரெஸ்டாரன்ட் ஓப்பனிங்க்கா பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது டெக்கரேஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்க அமிர்தா மற்றும் செல்வி இருவரும் விளக்கை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருகின்றனர் தூக்க முடியாமல் எடுத்துட்டு வரோம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணல என்று கேட்கிறார் ஆனால் இனியா எதுவும் சொல்லாமல் மொபைலையே பார்த்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் அன்னைக்கு பார்த்ததோடு டெக்கரேஷன் பண்ணதெல்லாம் இருக்கு சூப்பரா இருக்கு பாக்யா என்று சொல்லுகிறார் உடனே செல்வியிடம் என்னோட பேருல ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணுங்க இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது ரெஸ்டாரன்ட் பாக்கியா ஓபன் பண்ணிட்ட என்று சொல்ல அதற்கு பாக்கியாவும் அதுக்கு என்னத்த இன்னும் பத்து கூட நான் உங்க பேர்ல ஓபன் பண்ணுவேன் அந்த அளவுக்கு ராசி நீங்க என்று சொல்ல ஈஸ்வரியும் ஓபன் பண்ணு என்று சந்தோஷப்படுகிறார்.
இவர்கள் ஒரு புறம் சந்தோஷமாக பேச இனியா டென்ஷன் ஆகவே இருக்கிறார் பிறகு காதலனுக்கு போன் போட்டு எங்கு வரை என்பதை விசாரிக்க கண்டிப்பா வரணுமா என்று கேட்கிறார் கண்டிப்பாக வந்து தான் ஆகணும் என்று சொல்ல ஏதாவது பிரச்சினை வராதா என்று கேட்கிறார் அதெல்லாம் நம்ம நேத்தே பேசி முடிவு பண்ணியாச்சு நீ வந்து தான் ஆகணும் என்று சொல்ல சரி 2 மினிட்ஸ்ல வரேன்னு சொல்லுகிறார். ரெண்டு நிமிஷத்துலயா என்று கேட்க ரெஸ்டாரன்ட் வெளியே தான் இருக்கேன் என்று சொன்னவுடன் போனை வைத்துவிட்டு இனியா காத்துக் கொண்டிருக்கிறார் பிறகு நேராக உள்ளே செல்ல பங்கு பார்த்துவிட்டு நான் கூப்பிடும் போது வரல இப்ப மட்டும் வந்திருக்கா சொல்லி என் மகன் என அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார் என தெரிய வருகிறது.
நான் சொல்லும் போது வரமாட்டேன்னு சொன்னா இப்ப மட்டும் வந்திருக்க என்று மகனிடம் செல்வி கேட்க ஆன்ட்டியோட ரெஸ்டாரன்ட் பங்க்ஷனுக்கு எப்படிம்மா வராமல் இருக்க முடியும் என்று சொல்ல பாக்யா பெரிய மனசு பண்ணி வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்பா என்று கிண்டல் பண்ணுகிறார். பிறகு அவர்களை கூட அறிமுகம் செய்து வைக்க தொடர்ந்து செமஸ்டர்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துக்கிட்டு இருக்கா என்று சொல்ல ஈஸ்வரி அதான் செல்வி சொல்லிக்கிட்டே இருப்பாளே நல்லா படிக்கணும் என்று சொல்லுகிறார் பிறகு கலெக்டராக போகும் விஷயத்தை சொல்ல அதைப் பற்றி பேசி கேட்கின்றனர் கோச்சிங் கிளாஸ் சேர இருப்பதாகவும் எக்ஸாம் எழுத போவதாகவும் சொல்லுகிறார் பாக்யா முதல் அட்டம்ட்ல கலெக்டர் ஆகிடனும் என்று சொல்ல அவரும் சரி என சொல்லுகிறார் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை இனியா சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிக்க வைத்திருக்க செல்வி பரவால்ல என்று சொல்லி சொல்ல எல்லாமே அக்கா அம்மா இவனை படித்து வைத்ததற்கு காசு கொடுத்தது எல்லாமே அக்கா தான் இல்லனா நான் பாலிடெக்னிக்லையோ இல்லையோ ஐ டி ஐ சேர்த்திருப்பேன் என்று சொல்லுகிறார் கண்டிப்பா என்னோட பேரையும் அக்காவோட பேரையும் என் பையன் காப்பாத்துவான் இன்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றன.
ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோவின் முன் நின்று பாக்கியாவுக்கு நீங்க ஒரு மாதிரி அப்பாவா எப்பவும் கூட நின்னு இருக்கீங்க இதுக்கப்புறம் நீங்க அவ கூட நிக்கணும் என சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து எழில் நிலா பாப்பாவுடன் வர ஈஸ்வரி வருகிறார் பிறகு பேசியவுடன் செழியன் வரல என்று கேட்க இதோ பார்க்கிங்கில் தான் இருக்கான் வந்துருவான் என்று சொல்ல குழந்தையை தூக்கிட்டு வராங்கள என்று கேட்கிறார் குழந்தையோட தான் வராங்க என்று சொல்ல ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார் உடனே அவர்களும் வந்து விட அனைவரும் நலம் விசாரித்து பேசிக்கொள்கின்றனர். பிறகு பாக்யாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லிய உடன் பங்க்ஷன் தொடங்குகிறது கோபி பொக்கே உடன் வந்து அனைவரையும் நலம் விசாரித்து விட்டு பாக்கியாவிற்கு வாழ்த்து சொல்லி பொக்கே கொடுக்கிறார்.
யார் திறந்து வைக்கப் போகிறார்கள் என்று கேட்க பாக்யா அத்தை தான் என்று சொல்லி ஈஸ்வரியை கூப்பிட்டு திறந்து வைக்க சொல்லுகிறார். அவரும் திறந்து வைக்க ஈஸ்வரி பாக்யாவை முதலில் உள்ளே போக சொல்ல அவரும் செல்கின்றனர். பிறகு ஆகாஷ் வர அவரை எழில், செழியன் என அனைவரும் நலம் விசாரித்து படிப்பை பற்றி விசாரித்து பேசுகின்றனர். பிறகு அனைவரும் உள்ளே வர குத்து விளக்கு ஏற்றி பங்ஷனை ஆரம்பிக்கின்றனர். ஆகாஷ் தனியாக நின்று கொண்டிருக்க பாக்யா அவரைக் கூப்பிட்டு ஜூஸ் கொடுக்கிறார் ஈஸ்வரி செழியன் மற்றும் ஜெனி இடம் என்ன கேட்கிறார்? கோபி என்னும் பதில் சொல்லுகிறார்? அதற்கு செழியன் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.