பாக்கியாவை நினைத்து வருத்தத்தில் எழில், ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

செழியன் கண்கலங்க கோபி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியனின் வேலை போக அதிர்ச்சியாகிறார். எவ்வளவு சொல்லியும் செழியனை வேலையில் இருந்து தூக்கி விடுகின்றனர். இதனால் செழியன் சோகம் அடைகிறார்.

மறுபக்கம் எழில் சோகமாக வீட்டிற்கு வந்து உட்கார அமிர்தா என்ன ஆச்சு என்று கேட்கிறார் எதுவும் பேசாததால் முதலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க என்ன ஆட்சி, அம்மா என்ன சொன்னாங்க எப்படி இருக்காங்க என்று கேட்க அவங்களுக்கு இப்போ பதினோரு லட்சம் தேவைப்படுது அமிர்தா, கையில மூணு லட்சம் இருக்கு ஆனா இப்ப 8 லட்ச ரூபா தேவைப்படுது ஆனா இதுவரைக்கும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல செல்வி அக்கா சொல்லித்தான் எனக்கே தெரியும் மனசுல அவ்ளோ கவலைய பூட்டி வச்சுக்கிட்டு எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று கண் கலங்குகிறார் இது மட்டும் இல்லாமல் இந்த ஒரு வாய்ப்பு தான் நான் பாக்க போறேன் அப்படி இல்லன்னா கண்டிப்பா வேற ஒரு வேலைக்கு போயிடுவேன் உன்னையும் குடும்பத்தையும் பார்க்கிற அளவுக்கு சம்பாதிக்கிற வேலைக்கு போயிடுவேன் என்று சொல்ல அப்படி எல்லாம் இல்லை இதில் நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க என்று அமிர்தா ஆறுதல் சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்த செழியன் வருகிறார் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க செழியன் உடைந்து கண்கலங்குவதை பார்த்து சரி நீங்கள் எல்லாம் போங்க ஆனா அப்புறம் பார்த்துகிறேன் என்று சொல்லிவிட்டு என்னாச்சு என்னாச்சு என்று கேட்க கோபியிடம் வேலை போயிடுச்சுப்பா என்று சொல்லி கோபியை கட்டிப்பிடித்து அழுகிறார். பொறுமையா இது சரியா ஒன்றும் இல்லை பார்த்துக்கலாம் சரி பண்ணிடலாம் என்று சொல்லியும் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கோபியிடம் சொல்ல கோபியும் சரி பார்த்துக்கலாம் என்று சொல்லுகிறார். நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான்பா அந்த வேலை செஞ்சேன் அந்த கம்பெனிக்காக நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன் இதுக்கு மேல ஜெனியை பார்த்துக் கொள்ள குடும்பத்த பாத்துக்கணும் ஜெனி ஒரு செக்கப் பாக்கணும் என்று எல்லாம் சொல்லி மீண்டும் அழுகிறார். உனக்காக நான் இருக்கேன் சரியா நான் பாத்துக்குறேன் என்று ஆறுதல் சொல்லுகிறார்.

ஈஸ்வரிக்கு பாக்கியா சாப்பாடு கொண்டு போக அவர் சாப்பிடாமல் திரும்பி வந்து விடுகிறார் செல்வி என்னாச்சு அவங்க ஏன் சாப்பிடாம இருக்காங்க என்று கேட்க அவங்க நிலைமையில் இருந்து பார் செல்வி அப்பதானே புரியும் என்று சொல்ல ஏற்கனவே நீ பணம் கஷ்டத்துல ஒன்னும் தெரியாம கஷ்டப்பட்டு இருக்க இந்த நேரத்துல அவங்களும் உள்ள கஷ்டப்படுத்திகிட்டு இருக்காங்க என்று சொல்ல அது அவங்களோட நிலைமை நம்ப ஒன்னும் சொல்ல முடியாது என்று சொல்லுகிறார் உடனே பணம் ரெடி பண்ணிட்டியா அக்கா இன்னும் ஒரு நாள்தான் இருக்கு விடிஞ்சதும் வந்து நின்னுடுவாங்க என்று சொல்ல பார்த்துக்கலாம் என்று சொல்லுகிறார். உடனே ஜெனி என்கிட்ட லாக்கர்ல இருக்குற நகை வேணா நீங்க அடமான வச்சுக்கோங்க ஆன்ட்டி என்று சொல்ல எதுக்கு என் பொண்ணு அனுப்பல என் பொண்ணு நகையே வச்சுட்டீங்களா என்று உங்க அம்மா கேட்கவா என்று சொல்ல அது என்னோட நகை அவங்க எதுவும் கேட்க மாட்டாங்க என்று சொல்லியும் பாக்யா வேண்டாம் என மறுத்து விடுகிறார். அந்த நேரம் பார்த்து செழியன் வர வா செழியா பிரஷ்ஷா ஆயிட்வா சாப்பிடலாம். என்று சொல்ல நான் சாப்பிட்டமா என்று மேலே சென்று விடுகிறார் இவளுக்கு இன்னும் ஆபீஸ் பிரச்சனை சரியாகவில்லையா ஜெனி என்று கேட்க ஆமான்டி என்று சொல்லுகிறார் சரி நீ போய் மேல பேச போ என்று அனுப்பி வைக்கிறார் உடனே செல்வியை மேல பெட்ஷீட் காயப் போட்டு இருக்க போய் எடுத்துட்டு வா என்று அவரையும் அனுப்பி வைக்கிறார். பிறகு பாக்கியா கோபி பேசிய விஷயங்களை நினைத்து யோசித்துக் கொண்டு நிற்கிறார்.

ப்ரோடுயூசரை தேடிச்சென்ற எழில் ப்ரொடியூசரை பார்த்தாரா? அவர் என்ன சொன்னார்? என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…

16 hours ago

அரசனில் சிம்புவுக்கு ஜோடியாவது குறித்து டூரிஸ்ட் பேமிலி நடிகை நெகிழ்ச்சி

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…

16 hours ago

மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு நடனமாடிய ஷ்ரத்தா கபூர் – வைரலாகும் வீடியோ!

பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…

16 hours ago

‘அரசன்’ படத்திற்கு அனிருத் தான் வேண்டும் என வலியுறுத்திய சிம்பு – தாணு பகிர்வு!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி,…

16 hours ago

‘விஜய்யின் கடைசி படமாக ‘கருப்பு’ அமைய வேண்டியது’ – ஆர்.ஜே. பாலாஜி தகவல்!

இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, தனது சமீபத்திய வெற்றிப் படமான ‘கருப்பு’ முதலில் நடிகர் விஜய்யை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாகவும்,…

16 hours ago

Massa Massa Lyrical Video

Massa Massa Lyrical Video | Peddi | Ram Charan | Buchi Babu | Janhvi |…

16 hours ago