Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்தை எண்ணி வருத்தப்படும் பாக்கியா.. கோபி செய்த வேலை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க வீட்டில் இருந்து இரண்டு புடவையை வாங்கிப் போன செல்வி அவரை எழுப்பி குளிக்க வைத்து சாப்பிட வைக்க முயற்சி செய்கிறார். சாப்பிடும்போது கூட பாக்கியா இனியாவை பற்றியும் குடும்பத்தாரை பற்றியும் பேசி வருத்தப்படுகிறார்.

இந்த பக்கம் ராதிகாவின் அண்ணன் கோபிக்கு போன் போட்டு அவருடைய உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். பிறகு கோபி ராதிகா மயூரா எப்படி இருக்காங்க என கேட்கிறார். அவங்கள நல்லபடியாக பார்த்துக்குங்க என கோபி சொல்ல அவங்கள நாங்க இப்படி பார்த்துக்க முடியும் விடிந்ததும் பாம்பேக்கு கலந்தராங்க என கூறுகிறார். இங்கே ஏதாவது பேசி இங்கேயே இருக்க வைக்கலாமே என சொல்ல ராதிகாவின் அண்ணன் அதெல்லாம் அவர் கேட்கிறாளா என கூறுகிறார்.

பிறகு அவருடைய அண்ணன் ராதிகாவிடம் இது குறித்து பேச இதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என குறிப்பிடுகிறார். இந்த பக்கம் ஈஸ்வரி கோபி செய்த தவறை பற்றி தன்னுடைய கணவரிடம் பேசி வருத்தப்படுகிறார். பசங்க முன்னாடி அசிங்கப்பட்டதால் அவ ஏதாவது பண்ணிக்க போறான். பயமா இருக்கு சொல்லி வருத்தப்பட அவனா மத்தவங்கள தான் சாவடிப்பான் அவன் சாக மாட்டான் என கோபியின் அப்பா ஆவேசமாக கூறுகிறார். பிறகு இருவரும் பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகின்றனர்.

அடுத்து செல்வி பாய் போட்டு பாக்கியாவை படுத்து தூங்க சொல்கிறார். எழிலும் அவரை தூங்க சொல்ல பாக்கியா படுத்துக் கொள்கிறார். பாக்யாவை நினைத்து வருத்தத்தில் இருந்த அவரது மாமனார் எழிலுக்கு போன் செய்து பாக்யா குறித்து விசாரிக்கிறார். பிறகு கோபி நல்லாவே இருக்க மாட்டான் என சாபம் விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update