Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை திட்டிய ஈஸ்வரி, வருத்தத்தில் எழில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மீண்டும் பாக்கியா வீட்டு வாசலில் வந்து நிற்க ராமமூர்த்தி அங்கேயே நில்லுடா உள்ள வராத என்று கோபப்பட கோபி அதையும் மீறி அம்மா என பேச முயற்சி செய்ய ஈஸ்வரி அதான் வெளியே போனு சொல்றாருல வெளியே போ உன்கிட்ட பேச எதுவும் இல்லை, நீ சொல்ற கதையெல்லாம் நிறைய கேட்டாச்சு. இனிமே எதுவும் கேட்க முடியாது. நீயா போ இல்ல நானே கழுத்தை புடிச்சு தள்ளவா என்று கேட்கிறார். உன்னை தொட்டா கூட பாவம் தான் வந்து சேரும் என திட்டுகிறார்.

மேலும் நேற்று நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் அடி மனசுல இருந்து சொன்னது என சொல்லி துரத்தி விட கோபி உடைந்து போய் வெளியே வருகிறார்.

வெளியே வந்த கோபி மீண்டும் ஈஸ்வரியை பார்க்க ஈஸ்வரி கோபியை நோக்கி நடந்து வர கோபி மன்னித்து விட்டதாக சந்தோஷப்பட கதவை அடைத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்ததாக இனியாவை காலேஜ் பிரண்ட்ஸ் சிலர் ஹோம் பார்ட்டிக்கு கூப்பிட நோ சொல்கிறார். நீ வராமல் நல்லா இருக்காது என ஆளாளுக்கு ஒண்ணு பேசி இனியாவை சம்மதிக்க வைக்கின்றனர்.

பாக்கியாவும் அமிர்தாவும் கதை சொல்ல போன எழிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். வீட்டுக்கு வந்த எழில் இரண்டு முறை டைம் கொடுத்தும் கதையை சரியான நேரத்தில் சொல்லலனு படத்தை ட்ராப் பண்ணிட்டாரு சொல்லிட்டாருனு அழுகிறார்.

இனிமே எதுவும் நடக்க போறது இல்ல.‌ சினிமா கனவை தூக்கி போட்டுட்டு வேற வேலைக்கு போக வேண்டியது தான் என வருத்தப்பட்டு எழுந்து செல்ல பாக்கியா கவலை அடைகிறார்.

அடுத்ததாக மயூ கோபிக்காக காத்திருக்க வீட்டுக்கு வந்த கோபி மயூவிடம் பேச ராதிகா ரூமுக்கு போய் படுத்து தூங்க சொல்லி விட்டு

மயூவை பத்தி உங்களுக்கு அக்கறையே இல்ல.. என்னை கேட்காமலேயே பாக்கியா அவளை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் என்று பேச கோபி பொய்யில் இருந்து உண்மையை கொண்டு வர தானே கூட்டி வந்தா.. இதுல என்ன தப்பு இருக்கு என பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update