தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கமலா மகனுடன் போனில் பேசிக்கொண்டிருக்க கதவைத் தட்ட கோபி போதையில் வீட்டுக்கு வந்து இனிமே நீங்க இந்த வீட்ல இருக்க கூடாது எங்க அம்மாவை எப்படி வெளியே எடுக்கணும்னு எனக்கு தெரியும் வெளிய போங்க என்று கோபப்பட கமலா நீங்க சொன்னா நாங்க போயிடுனுமா? அதெல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். மயூ என் கூட தான் இருக்கணும் என்று சொல்ல கமலா நாங்க யாரும் வெளியே போக முடியாது என்று ரூமுக்குள் சென்று வருகிறார்.
அதைத்தொடர்ந்து அடுத்த நாள் ராமமூர்த்தி கோர்ட்டுக்கு வரவில்லை என்று சொல்ல பாக்கியா நீங்க கண்டிப்பா வரணும் என்று உறுதியாக சொல்லி அவரை ரெடி ஆகி வர சொல்கிறார். இறுதியாக எல்லாரும் கோர்ட்டுக்கு கிளம்ப நீங்க போங்க நான் ரெஸ்டாரண்ட்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு கோர்ட்டுக்கு வந்துடுறேன் என்று கிளம்பி செல்ல அக்கா ஏன் இப்படி பண்ணுதுன்னு தெரியல.. ரெஸ்டாரன்ட் வேலை முக்கியமா என்று செல்வி புலம்புகிறார்.
அதேபோல் இந்த பக்கம் ராதிகா கோர்ட்டுக்கு வரவில்லை என்று சொல்ல கமலா மைண்ட் வாஸ் செய்து அழைத்து வருகிறார். பிறகு எல்லோரும் கோர்ட்டுக்கு வர பாக்கியா இல்லாததால் கமலா எங்க பாக்கியாவை காணும் என்று தேடுகிறாள்.
பிறகு கோபி அங்கு வர ராமமூர்த்தியை பார்த்து அப்பா என்று சொல்ல அப்படி சொன்னா கொன்னு போட்டு விடுவேன் என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
