தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும் ராதிகா என இருவரும் பாக்கியா வீட்டை நோட்டம் இட்டுக் கொண்டிருக்க கோபி வந்தது நைசாக நழுவி வீட்டுக்குள் வந்து விடுகின்றனர்.
இதையடுத்து செடியின் மற்றும் எழில் என இருவரும் ஈஸ்வரி கைதாவதை தடுத்து நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று லாயரிடம் போனில் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போலீஸ் வீட்டுக்கு வர கமலா இதை பார்த்து ரசிக்கிறாள். நரக உள்ளே வந்த போலீஸ் ஈஸ்வரி யாரு எங்கே என்று கேட்க ராமமூர்த்தி ஈஸ்வரி எதுக்கு நீங்க கேட்கிறீங்க என்று கேட்க அவங்க மேல கம்ப்ளைன்ட் வந்து இருப்பதாக சொல்கின்றனர். யார் கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன கம்பளைண்ட் என்று கேட்க ராதிகாவை குறித்து தள்ளி குழந்தை களைந்த விஷயத்துக்கு கமலா கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக சொன்னதும் அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.
ஈஸ்வரி அப்படி பண்ணி இருக்க மாட்டாய் என்று எல்லோரும் போலீஸிடம் பேச எதையும் அவர்கள் கேட்காமல் ஈஸ்வரியை கைது செய்து வெளியே அழைத்து வர கமலா ராதிகாவை கூட்டி வந்து இந்த கண் கொள்ளாத காட்சியை பாரு உன்னை அழ வச்சவங்க இப்ப மொத்தமா அழறாங்க என்று சொல்லி ரசிக்கிறாள்.
ஈஸ்வரி நான் எதுவுமே பண்ணல என்று சொல்லியும் போலீஸ் அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்ல மொத்த குடும்பமும் அழுது துடிப்பதை பார்க்க முடியாமல் ராதிகா வீட்டுக்கு சென்று விடுகிறார். பிறகு கோபி வெளியே வர போலீஸ் வண்டி வந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்து யாருக்கு என்னாச்சு என்று பதறி ஓடி வர கமலா கோபி பார்த்ததும் நைசாக நழுவி சென்று விடுகிறார்.
இதை எடுத்து கோபியை பார்த்து ராமமூர்த்தி சரமாரியாக அடி கொடுத்து இன்னும் எத்தனை முறை தான் எங்கள உயிரோட கொன்னு சமாதி கட்ட போற என்று ஆவேசப்படுகிறார். கோபி என்னப்பா ஆச்சு என்ன சொல்றீங்க என்று கேட்க இனியா கமலாவை கைது செய்து அழைத்துச் சென்ற விஷயத்தை சொல்கிறார். ராமமூர்த்தி உன்னையே நம்பி இருந்த அவளுக்கு போய் இப்படி துரோகம் பண்ணிட்டியே நீ நல்லாவே இருக்க மாட்ட என்று சாப்பிட விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
