Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமலாவிடம் கோபப்பட்ட கோபி, ராதிகா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகா, மற்றும் கமலா ஆகியோர் வெளியே கிளம்புவதை பார்த்து எங்க போறீங்க என்று கேட்க மயூ செக்கப் போகும் விஷயத்தை சொல்ல கோபி மறந்தே போயிட்டேன் நான் கிளம்பி வரேன் என்று சொல்ல கமலா நீங்க எதுக்கு மாப்ள டைம் வேஸ்ட் பண்றீங்க? நாங்க பாத்துக்கிறோம். உங்களுக்கு உங்க அம்மாவ பத்தி யோசிக்கவே நேரம் இருக்காது என்று சொல்ல ராதிகா கேப் வந்ததும் வாங்க போகலாம் என்று கூப்பிடுகிறார். கோபி மயூவை விட்டுட்டு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல கமலா எதுக்கு எங்க அம்மா போன் பண்ணதும் அம்போனு விட்டுட்டு போய்டுவீங்க என்று அழைத்துச் செல்கின்றனர்.

திரும்பி வந்ததும் கோபி என்ன சொன்னாங்க என்று கேட்டு கமலா எத பத்தியும் யோசிக்காமல் நிம்மதியா இருக்க சொன்னாங்க ஆனா உங்க வீட்ல எப்படி முடியும்? உங்க அம்மா பண்ண வேலை அப்படியா என்று ஈஸ்வரி பற்றி பேச கோபி ஒரு கட்டத்தில் கோபப்பட்டு என்னை மீறி போறீங்க என்று கடுப்பாகிறார். இதனால் ராதிகா அப்படித்தான் பேசுவோம் நடந்ததுதான் பேசுவோம். இருக்க முடிஞ்சா இருந்தா இல்லன்னா கிளம்பி போயிட்டே இருங்க என கொடுக்கிறார்.

கும்பகோணம் வந்ததும் ஓரளவுக்கு மனசு மாறும் ஈஸ்வரி கும்பகோணத்தில் வசித்ததையும் தனது தோழிகள் பற்றியும் பேசுகிறார். மறுபக்கம் கோபி பாரில் செந்திலிடம் ராதிகா சொன்னதைப் பற்றி பேசி சத்தம் போட்டு பேச பக்கத்தில் இருந்தவர்கள் கடுப்பாக கோபி அவர்களிடம் சண்டைக்கு போக பிரச்சனை கை கலப்பு ஆகிறது. இந்த நேரம் பார்த்து எழில், செழியன் அங்கு வர கோபியை காரில் ஏற்ற எழில் செழியனிடம் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi Serial episode update
Baakiyalakshimi Serial episode update