Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவமானப்பட்ட ஈஸ்வரி, வருத்தத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அப்படியே ஈஸ்வரி பற்றிய யோசனையில் இருக்க செல்வி எழில் ஆகியோர் அவங்கள பத்தி எதுக்கு யோசிக்கணும் என்று திட்டுகின்றனர். பாக்கியா அவங்க ஏன் அத்தை என்று கோபப்படுகிறார்.

பிறகு ராதிகா டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு வர ஈஸ்வரி உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கமலா ராதிகா என இருவரும் ஈஸ்வரியை ரவுண்டு கட்டி வாக்குவாதம் செய்கின்றனர். பதிலுக்கு ஈஸ்வரி நான் எதுவும் செய்யல கோபி அப்படியே நிக்கறியே, அம்மா எதுவும் செய்ய மாட்டாங்க என்று சொல்ல மாட்டியா என்று கண்கலங்க என்னமா சொல்ல சொல்றீங்க எல்லாம் நீங்கதான் பண்ணீங்க என்று கோபியும் தனது பங்குக்கு ஆவேசப்பட ஈஸ்வரி உடைந்து போகிறார்.

கமலா என்ன மாப்ள அவ்வளவுதானா! இன்னும் எதுக்கு இவங்க இந்த வீட்ல இருக்கணும் வெளியே போக சொல்லுங்க என்று சொல்ல ராதிகாவும் தயவு செய்து வெளியே போயிடுங்க என்று ஆவேசப்பட கோபி நீங்க பண்ணதே போதும் போய்டுங்கம்மா என்று கோபப்படுகிறார்.

இதனால் ஈஸ்வரி ரூமுக்கு வர கமலா வெளியே போறீங்களா இல்ல கழுத்த புடிச்சு தள்ளவா என்று கேட்க ராமமூர்த்தி உனக்கு அந்த வீட்டுக்கு போய் அவமானப்பட்டா தான் புத்தி வரும் அப்பதான் பாக்யாவோட அருமை தெரியும் என்று சொன்ன விஷயத்தை எல்லாம் நினைத்து கண்கலங்குகிறார். இறுதியாக சூட்கேஸ் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிறார்.

ஈஸ்வரி ரோட்டில் நின்றபடி இருக்க பாக்கியா யாரோ கூப்பிட்டது போல இருக்கிறது என்று வெளியில் ஓடி வந்து பார்க்க ஈஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து என்னாச்சு என்று கேட்க பதில் ஏதும் பேசாமல் நிற்கும் ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு அழுவதோடு பாக்கியாவை கட்டிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update