தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமிடம் உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்று சொல்லி சர்வே வாழ்க்கையில பாதி வாழ்க்கையை கிச்சன்லையே தொலைச்சி இருக்கேன். கணக்கே இல்லாம பிளாக் டீ போட்டு கொடுத்திருக்கேன். இப்பவும் இந்த வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன், ஆனா அதோட சேர்த்து என்னுடைய கனவுக்காகவும் ஓடிக்கிட்டு இருக்கேன். இப்பதான் எனக்கான வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்கேன். ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கேன்.
எனக்கு பெரிய பசங்க இருக்காங்க, மருமகள்கள் இருக்காங்க, இனியாவுக்கு கல்யாண வயசு வரப்போகுது இப்படி இருக்கும் போது நான் அவங்கள பத்தி தானே யோசிக்க முடியும். இந்த நேரத்துல என் வயசுல இருக்க ஒருத்தர் என்கிட்ட வந்து வாழ்க்கையை பத்தி பேசினா நான் என்ன முடிவு எடுக்க முடியும்? ஏன் சார் என்னால தனியா வாழ முடியாதா? எனக்காக என் குடும்ப இருக்கு என்னுடைய நண்பனா நீங்க எப்போதும் கூட இருக்கீங்க அப்படி இருக்கும் போது நான் ஏன் தனியா வாழ கூடாது என்று கேட்கிறார்.
பழனிச்சாமி நீங்க கண்டிப்பா வாழலாம் என்று சொல்கிறார். என் கூட எப்பவும் இப்ப இருக்கிற மாதிரியே நல்ல நண்பனா நீங்க இருப்பீங்க தானே என்று கேள்வி கேட்க பழனிச்சாமி கண்டிப்பா இருப்பேன் மேடம் என்று சொல்கிறார். மேலும் அவங்களுக்கு நல்ல நண்பனா மட்டும் இருக்கணும் என்று பழனிச்சாமி முடிவு செய்கிறார்.
இதைத்தொடர்ந்து ராதிகா செக்கப் போகணும் என்று கோபிக்கு போன் செய்ய கோபியும் கரெக்டா 5.30 மணிக்கு வந்துடுவேன் என்று சொல்கிறார். பிறகு கமலா ஈஸ்வரியிடம் சென்று வம்பு இழுக்க ஈஸ்வரி இத வச்சு ஒரு பிரச்சனை செய்ய நினைச்சேன்னா அதுக்கு நான் தயாராக இல்லை என்று நகர்ந்து சென்று விடுகிறார்.
அடுத்து பாக்கியா விமல் குறித்து கேட்க இனியா ரெஸ்டாரண்டில் நடந்த விஷயம், பர்த்டே பார்ட்டியில் நடந்த விஷயத்தை சொல்கிறார். கோபி கோவப்பட்டதையும் விமல் எனக்கு ஒரு நல்ல பிரண்டு மட்டும்தான் எனவும் சொல்கிறார்.
பிறகு ராதிகா கிச்சனிலிருந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நடந்து வரும்போது கீழே விழுந்து கிடந்த ஃப்ளவர் தொட்டியின் மீது கால் வைத்து கீழே வழுக்கி விழ ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். ராதிகாவுக்கு வயிற்றில் அடிபட்டு வலியில் துடிக்க கமலா ஈஸ்வரிக்கு தகவல் கொடுக்க அவரும் பதறி அடித்து ஓடி வந்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். ராதிகாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என ஈஸ்வரி பிரார்த்தனை செய்கிறார். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…