Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி சொன்ன வார்த்தை,ஷாக்கான ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கமலாவும் ராதிகாவின் பேசிக் கொண்டிருக்க காலிங் பெல் அடிக்க கமலா கதவை திறக்க பாக்கியா நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறார். நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்க அத்தைக்கு சாப்பாடு கொண்டு வந்ததாக சொல்ல அதான் மாப்பிள்ளை வேளை வேளைக்கு சாப்பாடு கொண்டு வந்து தராரே நீ எதுக்கு எடுத்துட்டு வந்த என்று கேள்வி கேட்கிறார்.

அதுதான் கொண்டுவர சொன்னதாக பாக்யா சொல்லிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யா வா வா நீ எதுக்கு கண்டவங்க கிட்ட பேசிட்டு இருக்க என்று உள்ளே அழைத்துச் செல்ல கமலா இது சரியா படல இந்த பாக்கியா இங்க வராத தடுத்து நிறுத்து என ஏத்தி விடுகிறார். பாக்கியா ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுத்து கிளம்பியதும் ராதிகா உள்ளே வந்து பாக்கியா எதுக்கு இங்க வராங்க இனிமே அவங்க வரக்கூடாது என்று சொல்கிறார்.

இது என் வீடு இங்கே யார் வரணும் வரக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும் என்று ராதிகா சொன்ன ஈஸ்வரி கோபி அந்த வீட்ல இருக்கும்போது நீ அங்க வந்து மாசக்கணக்கா தங்கலையா அப்போ இதெல்லாம் உனக்கு தோணலையா என்று பதிலடி கொடுத்து வெளியே துரத்துகிறார்.

கோபி வந்ததும் ராதிகா பாக்கியா எதுக்கு இங்க வராங்க? இனிமே வரக்கூடாது என்று சொல்ல கோபி பாக்கியா வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை அம்மாவை பார்க்க அவ வரத்தான் செய்வா என்று அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்யா சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறது எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கு என்று பேச ராதிகா இன்னும் கடுப்பாகிறார்.

பிறகு இனியாவின் பிறந்தநாள் என்பதால் பாக்யா தூங்காமல் காத்திருந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல பின்னாடி செழியன் ஜெனி அமிர்தா எழில் என எல்லோரும் வந்து வாழ்த்து சொல்கின்றனர். அடுத்து எல்லோரும் தூங்கச் சென்றதும் பாக்யா இனிமே உன் வாழ்க்கையில நிறைய மனுஷங்களை பார்ப்ப.. காதல், ரிலேஷன்ஷிப் எனும் எல்லாம் வரும். இது எல்லாத்துக்கும் முன்னாடி நீ ஒரு பெரிய இடத்துக்கு போய் இருக்கணும். அம்மாவை மாதிரி எந்த அவமானத்தையும் பாக்காமல் நீ பெரிய இடத்துக்கு போகணும் என்று அட்வைஸ் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update