ஈஸ்வரியை பார்க்க சென்ற பாக்யா, ராமமூர்த்தி, கோபத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுத்து சாப்பிட வைக்கிறார்.

அதன் பிறகு நைட்டானதும் பாக்யா ரெஸ்டாரன்டில் இருந்து லேட்டாகி வீட்டுக்கு வர டைம் ஆகிவிட்டதால் இனியாவையும் கூப்பிட்டு வேலை செய்ய சொல்கிறார். பிறகு இவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி கிச்சனுக்கு வர பாக்கியா பசிக்குதா என்று கேட்கிறார். இல்லம்மா என்று சொல்ல பாக்கியா ஏன் மாமா டல்லா இருக்கீங்க என்று கேட்க மனசு சரியில்ல ஈஸ்வரியை பாக்கணும் போல இருக்கு என்று சொல்லி துணைக்கு இனியாவை கூப்பிட இனியா அங்க மயூவோட பாட்டி இருப்பாங்க நான் வரல என்று சொல்கிறார். பிறகு அமிர்தாவை கூப்பிட அமிர்தா தாத்தா நான் எப்படி நான் வரல என்று சொல்கிறார். அதன் பிறகு ஜெனி எனக்கும் பாட்டியை பாக்கணும் போல இருக்கு ஆனா நான் வரல என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா நான் உங்க கூட வர மாமா என்று சொல்லி கிளம்பிச் செல்கிறார். ராதிகா வீட்டு காலிங் பெல் அடிக்க ராதிகா கதவை திறந்து இவர்களை பார்த்து ஷாக்காகிறார். பாக்கியா மாமா அத்தை பாக்கணும்னு சொன்னாரு அதான் கூட்டிட்டு வந்து விட்டேன் என்று சொல்ல ராதிகா உள்ள கூட்டினால் ஈஸ்வரி இவர்களை பார்த்துவிட்டு சந்தோஷப்பட்டு கூப்பிடுகிறார்.

பிறகு பாக்யா ஈஸ்வரிக்கு கொண்டு வந்த சாப்பாட்டை கொடுத்து சாப்பிட வைக்க ஈஸ்வரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கோபியும் வீட்டுக்கு வந்து விடுகிறார். பாக்யா சாப்பாட்டு சாப்பிட்ட பிறகுதான் செத்துப்போன நாக்குக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு என்று சொல்கிறார். கோபியும் பாக்கியாவும் மாறி மாறி ஈஸ்வரியை பார்த்துக் கொள்ள இதைப் பார்த்து ராதிகா மற்றும் கமலா கடுப்பாகின்றனர்.

அதன் பிறகு இவர்கள் கிளம்பி வர ஈஸ்வரி அடிக்கடி வீட்டுக்கு வாங்க என்று சொல்கிறார். பிறகு பாக்கியா இனியாவுடன் உட்கார்ந்து ப்ராஜெக்ட் வேலை பார்க்கிறார். அதன் பிறகு இனியா தூங்கப்போனதும் எழில் கீழே போய் கதை எழுதவே முடியல இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த மாட்டேனோனு பயமா இருக்கு என்று சொல்கிறார்.

இதுக்கு பேரு மைண்ட் பிளாக்-னு சொல்லுவாங்க என்று பாக்கியா டீ போட்டுக் கொடுத்து எழிலை கூலாக்கி கதை எழுத வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode updatefr
jothika lakshu

Recent Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

7 hours ago

அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…

9 hours ago

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…

13 hours ago

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…

13 hours ago

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

18 hours ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

1 day ago