பிரச்சனையை தீர்த்த பழனிச்சாமி, பெயர் வைத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியனோட குழந்தை எங்க வீட்டு வாரிசு நாங்க எங்க விருப்பப்படி தான் பேர் வைப்போம் என்று சொன்ன ஜோசப் அப்படியெல்லாம் நடக்காது நாங்க தான் பேர் வைப்போம் என்று சொல்கிறார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுக்க பழனிச்சாமி குடும்பத்தினர் வீட்டுக்கு வர எல்லோரும் அவர்களை வரவேற்கின்றனர். அதன் பிறகு ஈஸ்வரியை மனதில் இருக்கும் பெயரை சொல்லு என்று சொல்கிறார் ராமமூர்த்தி.

ஈஸ்வரி குழந்தையின் பெயரை சொல்லப்போகும் சமயத்தில் ஜோசப் மீண்டும் வாக்குவாதத்தை தொடங்க பழனிச்சாமி இப்படி எல்லாம் பண்ணீங்கன்னா நாளைக்கு அந்த குழந்தை எனக்கு பேர் வைக்குற பங்க்ஷனிலேயே இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக்கிச்சுனு நெனச்சு கவலைப்படுமா படாதா அதனையும் எங்க ஜோசப் தாத்தா ரொம்ப கோபப்பட்டாரு அப்படின்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படும் என்று சொல்லி ஜோசப்பை அமைதியாக்குகிறார்.

முதல்ல அம்மா அவங்க மனசுல இருக்க பேரு சொல்லட்டும் அதுக்கப்புறம் பேர் பிடிக்கலைன்னா மாத்திக்கலாம் என்று சொல்ல செழியன், ஜெனி பாட்டி எந்த பேர் சொன்னாலும் எங்களுக்கு ஓகே தான் அதுல எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொல்கிறார்கள். உடனே ஜோசப் திரும்பவும் அப்போ எங்களை விட உனக்கு இவங்க தான் முக்கியமா போச்சா என்று வாக்குவாதம் செய்ய பழனிச்சாமி நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் பொண்ணை என்னமா வளர்த்து இருக்கீங்க எவ்வளவு பொறுமையா ரெண்டு குடும்பத்துக்கும் ஏத்த மாதிரி நடந்துக்குது என்று பாராட்டி பேச ஜோசப் பெருமையில் அமைதியாகி விடுகிறார். அதன் பிறகு ஈஸ்வரி யாழினி என்ற பெயரை சொல்ல அந்த பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. பிறகு எல்லோரும் குழந்தைக்கு யாழினி என பெயர் சூட்ட ஒவ்வொருத்தராக குழந்தையின் காதில் பேரை சொல்லி வாழ்த்துகின்றனர். இறுதியாக பழனிச்சாமி குடும்பத்தையும் பெயர் சொல்ல சொல்ல கோபி அதை பார்த்து கடுப்பாக ராதிகா முறைக்கிறார்.

அடுத்ததாக சாப்பிட்டுவிட்டு எல்லோரும் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா எழுந்து ரூமுக்கு செல்ல தவறி கீழே விழப் போகும்போது கோபி ஓடிப்போய் பிடித்து பார்த்து பார்த்து பேபிக்கு ஏதாவது ஆகிட போகுது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி பேபியா என்று கேட்க நான் ராதிகா பேபியை தான் சொன்னேன் என்று சொல்லி சமாளிக்கிறார் கோபி. எல்லோரும் தலையில் அடித்துக் கொள்ள ராமமூர்த்தி கோபியை பிடித்து திட்டுகிறார்.

அதன் பிறகு பழனிச்சாமி குடும்பத்தினர் கிளம்ப பாக்யா அவர்களுக்கு சமைத்த சாப்பாட்டை கொடுத்து அனுப்புகிறார் எல்லாருடைய மனசையும் நீங்க சந்தோஷமா மாத்தறீங்க என்று நன்றி சொல்லி வழி அனுப்புகிறார். செல்வி கிண்டல் அடிக்க நான் ஜெனி ஓட அப்பாவை பத்தி சொன்னேன் என்று பதிலடி கொடுக்கிறார்.

அதன் பிறகு தனியாக இருக்கும் ஈஸ்வரியை கோபி வாங்க அம்மா வெளிய போயிட்டு வரலாம் என்று கூட்டி செல்கிறார். உனக்கு ஏதாவது பிரச்சனையாப்பா ஏன் நீயும் ராதிகாவும் ஒரு வாரமா ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேள்வி கேட்க கோபி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

21 hours ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

21 hours ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

23 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago