திறப்பு விழாவில் நடந்த டுவிஸ்ட்,கோபத்தில் ஈஸ்வரி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமைச்சரின் மேனேஜர் துரைக்கு போன் போட்டு அமைச்சர் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு வருவதாக சொல்லியிருந்தார் கிளம்பிட்டாங்களா என்று விசாரிக்க கடைசி நிமிடத்தில் ஒரு ஸ்கூல் பங்க்ஷன் வந்திருச்சு, அதுக்கு கிளம்பி போய்ட்டாங்க ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு வர மாட்டாங்க என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு எல்லோரும் பாக்கியாவிடம் என்னாச்சு என்னத்த நாங்க என்று கேட்க போன் எடுக்கலை என்று சொல்லி சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து ஜெனி அமிர்தா எழில் ஆகியோரை கூட்டிச் சென்று அமைச்சர் ஸ்கூல் பங்க்ஷன் என்ற விஷயத்தை சொல்லி வருத்தப்பட சரி தாத்தா பாட்டி வைச்சு ரெஸ்டாரண்ட் திறக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

இவர்கள் ஒன்றுகூடி பேசிக் கொண்டதை பார்த்த கோபி அமைச்சர் வர மாட்டாங்க என்ற விசியம் தெரிஞ்சு போச்சு இதுதான் சரியான டைம் நாம உள்ளே என்று கொடுக்கலாம் என்று உள்ளே வந்து ஈஸ்வரிடம் இன்னும் அமைச்சர் வரலயா என்று கேட்டு பாக்கியாவுக்காக பரிதாபப்படுவது போல டிராமா போடுகிறார்.

பிறகு பாக்யா அமைச்சர் வர மாட்டாங்களாம், வேறொரு ஸ்கூல் பங்க்ஷன் போயிட்டதாக சொல்றாங்க கடைசி நேரத்துல சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க நீங்களும் மாமாவும் சேர்ந்து ரெஸ்டாரண்ட்ட திறந்து வையுங்க என்று சொல்ல ஈஸ்வரி இப்பதான் எங்க ஞாபகம் வருதா என கோபப்படுகிறார்.

ராமமூர்த்தி இப்ப என்னம்மா நாங்க உனக்கு ரெஸ்டாரன்ட் திறந்து வைக்கணும். அவ்வளவு தானே திறந்து வச்சுட்டா போச்சு என ஈஸ்வரியை கூப்பிட்டு ரிப்பன் கட் பண்ண போகும் சமயத்தில் மீடியாக்காரர்களின் கார் வந்து நிற்கிறது.

காரில் வந்து கொண்டிருந்த அமைச்சர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழா விஷயம் தெரிய வந்து பிஏவுக்கு ரைடு விட்டு இன்னும் பத்து நிமிஷத்தில் பாக்யாவோட ரெஸ்டாரண்டில் இருக்கணும் என ஆர்டர் போடுகிறார்.

இதையடுத்து பாக்கியா அவங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியல நீங்க கட் பண்ணுங்க மாமா என்று சொல்ல திரும்பவும் கட் பண்ண போகும்போது அமைச்சரின் கார் வந்து நிற்க எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

பிறகு அமைச்சர் லேட்டாக வந்ததற்காக மன்னிப்பு கேட்க பாக்யா நீங்கள் வந்தது ரொம்ப சந்தோஷம் என சொல்கிறார். அமைச்சகின் வருகையால் கோபி பேரதிர்ச்சியில் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Muthe Video Song

Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…

3 hours ago

Nova Trailer

Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…

3 hours ago

Karuppa Kooda Va Lyric Video

Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…

3 hours ago

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…

4 hours ago

கருப்பு படத்தில் ‘ப்ரீத்தி’யாக த்ரிஷா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…

4 hours ago

நடிகை சிம்ரன் அடுத்த பட அப்டேட் வெளியிட்ட விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…

4 hours ago