Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி சொன்ன வார்த்தை. பாக்யா கொடுத்த பதில். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பசங்க அம்மா அப்பா என எல்லோரும் தன்னை பற்றி கவலைப்பட்டு அக்கறை கொண்ட விஷயங்களை சொல்லி ரொம்ப குடுத்து வைத்தவன் என்று சந்தோஷமாக பேச ஒரு இடத்தில் கூட ராதிகா தன்னுடைய பெயரை சொல்லாததால் கோபியிடம் கோபப்படுகிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி டிவி பார்க்க அப்பா மகன் பாடல் ஒளிபரப்பாக அதைக் கேட்டு செழியன் கண்கலங்கி எழுந்து ரூமுக்கு சென்றுவிட பாக்யா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு கோபி பாக்கியாவிடம் நீ ஆரம்பித்து பிசினஸ் எல்லாமே பாதியில தான் போய் முடிஞ்சது இந்த ரெஸ்டாரன்ட் ஓபனிங் அப்படித்தான் இருக்கும் என்று வம்பு இழுக்கிறார்.

முதலில் பிரச்சனை வேண்டாம் என பாக்கியா நகர கோபி விடாமல் பேச பாக்யா முட்டி மோதி இப்ப என்கிட்ட ஒரு வேலை இருக்கு சிலருக்கு அது கூட இல்லை என்று கோபிக்கு பதிலடி கொடுக்க கோபி கோவப்பட பார்த்து பார்த்து பிபி அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்திட போகுது, அப்புறம் ஹார்ட் பேஷன்ட் ஆகிடுவீங்க என்று பதிலடி கொடுத்து இங்கிருந்து நகர்கிறார்.

மறுநாள் பாக்கியா மற்றும் இனியா இருவரும் ஜெனி வீட்டுக்கு வந்து இன்விடேஷன் கொடுக்க வழக்கம் போல ஜெனி அப்பா கோபப்பட கேஸ் ஒரு பக்கம் போகட்டும் எனக்கு ஜெனி மேல உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கு இன்விடேஷன் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை நான் கொடுக்கிறேன். வருவது வராததும் ஜெனி ஓட இஷ்டம் என்று கூறி பத்திரிக்கையை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update