baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தா மற்றும் நிலா பாப்பா இருவரும் ரூமுக்குள் இருக்க உள்ளே வரும் எழில் நிலாவிடம் தூங்கலையா என்று கேட்க தூக்கம் வரலப்பா விளையாடலாம் என்று சொன்னதும் இப்போ டைம் ஆயிடுச்சு படுத்து தூங்கலாம் காலையில சீக்கிரம் எழுந்து விளையாடலாம் என்று கூறுகிறார்.
அதன் பிறகு எழில் கண் கலங்கும் அமிர்தாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என்கூட நீ இருந்தா மட்டும் போதும். நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது என சொல்கிறார். நீ என்னை விட்டு போயிட மாட்டல என்று கேட்க என்ன எழில் இப்படி எல்லாம் கேட்கிறீங்க நான் என்னைக்கும் உங்க கூட தான் இருப்பேன் என்று அமிர்தா சொல்கிறார்.
மறுபக்கம் கோபி மற்றும் ஈஸ்வரி பெட்டில் படுத்து இருக்க உள்ளே வரும் ராதிகா வாங்க கோபி மேல இருக்க ரூமை நான் ரெடி பண்ணிட்டேன் நாம அங்க படுக்கலாம் என்று சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் நீ வேணா போய் அங்க படு கோபி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்ல கோபி இல்லமா நான் தான் அந்த ரூமை ரெடி பண்ண சொன்னேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.
ஹாலில் ராமமூர்த்தி படுக்க பாயை விரிக்க ராதிகா நாங்க மேல இருக்க ரூமுக்கு போயிட்டோம் நீங்க உள்ள படுத்துக்கங்க மாமா என்று சொல்லி மேலே செல்கிறார். ரூமுக்குள் வந்ததும் கோபி என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் நான் இருக்கேன் என்று சொல்லிட்டேன் ஆனா எழில் வாழ்க்கையில அடுத்து என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கோபி வருத்தப்படுகிறார்.
இப்ப ராஜேஷ் வந்து எனக்கு மயூவும் ராதிகாவும் வேணும்னு கேட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்று ராதிகா கேட்க அது எப்படி அனுப்ப முடியும் நீ என்னுடைய மனைவி, பழையதை எல்லாம் மறந்துட்டு நாம புது வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கோம் என்று சொல்கிறார். அதே மாதிரி தான் அமிர்தாவும் பழசு எல்லாத்தையும் மறந்துட்டு எழில் தான் உலகம்னு வாழ்ந்துட்டு இருக்கா அவ எழிலோடு தான் இருக்கணும். அவ மனசு முழுக்க எழில் தான் இருக்கான் என்பது கணேஷ்க்கு புரிய வச்சு அவனா விலகி போகிற மாதிரி செய்யணும். இல்லன்னா அதற்கான வேலைகளை நாம செய்யணும் என்று சொல்கிறார்.
மறுநாள் பாக்கியா எல்லோருக்கும் காபி கொடுக்க ஓடிவரும் நிலா பாப்பா தாத்தா அத்தை பாட்டி என எல்லாரிடமும் ஒட்டிக்கொள்ள இதை பார்த்து ராமமூர்த்தி இந்த குழந்தையை எப்படி விட முடியும்? என் பேத்தி எப்பவும் என் கூட தான் இருப்பா எவன் வந்து கேட்டாலும் கொடுக்க மாட்டேன் என்று கண்கலங்க அதை பார்த்து பாக்கியா, ஈஸ்வரி என எல்லோரும் கலங்கி நிற்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…